சொந்த மகளை கொன்று பேஸ்புக்கில் வெளியிட்ட கொடூரன்

பாங்காக்: தாய்லாந்து நாட்டில் 11 மாத பெண் குழந்தையை வீட்டின் மாடியில் இருந்து கீழே போட்டு, அதன் வீடியோ காட்சிகளை பேஸ்புக்கில் வெளியிட்ட கொடூரன் தானும் தற்கொலை செய்து கொண்டான்.
தாய்லாந்து நாட்டின் புக்கட் நகரை சேர்ந்தவன் ஊடிசான். இவனது மனைவி திரிராத்னா. இவர்களுக்கு, 11 மாத பெண் குழந்தை உள்ளது. திரிராத்னாவுக்கு ஏற்கனவே திருமணமாகி, ஐந்து வயதில் ஒரு மகன் உள்ளான். மனைவி மீது அதிருப்தி அடைந்த ஊடிசான் நேற்று முன்தினம், வீட்டின் மாடியில் இருந்து 11 மாத பெண் குழந்தையை கீழே வீசி கொன்றுள்ளான். இந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்து, அதை பேஸ்புக்கிலும் பதிவு செய்துள்ளான். இந்த வீடியோ காட்சியை பல ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். சொந்த மகளை கொன்ற ஊடிசான் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளான். அவன் மனநலம் பாதிப்பில் இதுபோல் செய்துள்ளான் என தாய்லாந்து போலீசார் தெரிவித்தனர். இந்த வீடியோ காட்சியை, பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்கு பிறகே பேஸ்புக் நிர்வாகம் நீக்கியுள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *