ஹிமாலயாவின் 'சென்னை பொன்னு' பிரச்சாரம் இன்றைய சென்னை பெண்ணின் மனநிலையை கொண்டாடுகிறது
சென்னை 24 ஏப்ரல் 2017:- இந்தியாவின் முன்னணி ஆரோக்கிய பிராண்ட் நிறுவனமான
ஹிமாலயா டிரக் கம்பனி அதன் முன்னணி தயாரிப்பான ஹிமாலயா புயூரிபையிங் நீம் ஃபேஸ்
வாஷிற்காக "சென்னை பொன்னு" (சென்னை பெண்) பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Link:https://www.youtube.com/watch?v=_gwJQhOvZm
M
இந்த பிரச்சாரமானது இன்றைய சென்னை பெண்ணின் சாராம்சத்தினை ஒரு வேடிக்கையான
மற்றும் மிருதுவான இசை வீடியோவில் காட்டுவதை நோக்கமாக கொண்டுள்ளது.
இன்றைய சென்னை பெண் அவளது உடை, அலங்காரம், தன் அழகு விருப்பத்திற்கு சாப்பிடுவது
என பல வழிகளிலில் வெளிப்படுகிறாள் ஆனாலும் அவள் கலாசாரத்தையும் சமமாக
அனுபவிக்கிறாள்.இந்த இசை வீடியோ அழகாக இந்த செய்தியை வெளிப்படுத்துகிறது,சென்னை
பெண்ணின் கதையை அது சார்ந்த அனுபவங்கள் மூலம் வெளிப்படுத்துகிறது.
இந்த பிரச்சாரம் பற்றி தனது முழு உளக்காட்சியினை பகிர்ந்து கொண்ட தி ஹிமாலயா டிரக்
கம்பனியின் மார்க்கெட்டிங் மேலாளர், ராகுல் பஞ்சால், “தமிழ்நாடு ஒரு தனித்துவமான
சந்தையாகும் மற்றும் மாநிலம் முழுவதும் நுகர்வோர் வளர்ந்து வருகின்றனர். இங்கே நுகர்வோர்
நடையில் ஒரு பெரிய மாற்றமும் ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள நுகர்வோருடன் எங்களது
வழக்கமான தொடர்பு, நகரத்தில் உள்ள இளம் பெண்கள் பல வழிகளில் மாறிவிட்டனர் என்பதை
உறுதிப்படுத்துகிறது. அவர்கள் நம்பிக்கையுடன் சுயாதீனமான மற்றும் நவீனமானவர்களாக
இருந்தாலும், அவர்கள் உள்ளூர் உணவு, இசை, நடனம் அல்லது திரைப்படங்கள் ஆகியவற்றில்
சென்னையின் வளமான கலாச்சாரத்தை அவர்கள் தொடர்ந்து அனுபவித்து வருகிறார்கள்.
சென்னை பொன்னு இசை வீடியோ மூலம், சென்னையின் நாகரீகமான உணர்வை ஒரு
வேடிக்கையாகவும், இதயமான வழியிலும் கொண்டாடுகிறோம், அதே நேரத்தில் அவள் நேசிக்கும்
நகரத்தின் உள்ளூர் சுவையை பிடித்து, அது எப்படி தன் தனிப்பட்ட ஆளுமையை வளர்த்துக்
கொள்ள உதவுகிறது என்பதை வெளிக்காட்டியுள்ளோம்.இது ஹிமாலயாவின் மண்டலத்தை
மையப்படுத்திய பெரிய பிரசாரம் ஆகும். இந்த ஆண்டு முழுவதும் பிராந்திய பிரச்சாரங்களை
நாங்கள் அறிமுகம் செய்யும் அதே நேரத்தில் அதிர்வுகள் கொண்ட சென்னை நகரத்தில்
தொடங்குவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம்! " என கூறினார்.
இந்த பிரச்சாரம் பற்றி பேசிய தி ஹிமாலயா டிரக் கம்பனியின் கேட்டகிரி மேலாளர் ஹேமங்
வசாணி “ஒரு பிராண்டாக ஹிமாலயா புயூரிபையிங் நீம் ஃபேஸ் வாஷ் இளம் பெண்களிடம்
பேசுகிறது மற்றும் அவர்கள் பருக்கள் பிரச்சினைகளை சமாளிக்க அவர்களுக்கு உதவுகிறது.
பிராண்ட் மீதானா எங்கள் டிவிசி தொடர்பு மையங்கள் இளைஞர்களின் தோல் சம்பந்தப்பட்ட
தொந்தரவுகளை கவனத்தில் கொள்கிறது, குறிப்பாக பருக்கள், வாழ்க்கையை
அனுபவிப்பதற்கான நம்பிக்கையை அளிக்கின்றன.இந்த 'சென்னை பொன்னு' பிரச்சாரம் மூலம்
ஒரு வேடிக்கையான மற்றும் மிருதுவான இசை வீடியோவில் ஆற்றல், உற்சாகம் மற்றும்
நம்பிக்கையை வெளிப்படுத்துவதன் மூலம் இந்த தகவல்தொடர்புகளை மேலும் வளர்க்க
விரும்பினோம். சென்னையில் உள்ள பெண்கள் நவீனமானவர்களாக இருந்தாலும் அவர்கள்
உள்ளூர் கலாச்சாரம் மற்றும் மரபுகள் குறித்து பெருமிதம் கொள்கின்றனர்.இது எங்களது
புயூரிபையிங் நீம் ஃபேஸ் வாஷ் உடன் ஒத்துள்ளது. இது நீம் மற்றும் மஞ்சள் போன்ற பாரம்பரிய
மூலிகைகள் கலந்த ஒரு சமகால தயாரிப்பு ஆகும்.” என்றார்.
"இந்த படத்தில் கூட, சென்னை பெண் தனது தோலை சிறந்த முறையில் பராமரிக்கும்
தயாரிப்பினை பயன்படுத்துவாள் என்ற செய்தியை நாங்கள் ஒருங்கிணைத்துள்ளோம்.பாடல்
கவர்ச்சிகரமான நடன அடிகளுடன் பெண்களை தொடர்பு படுத்தி அவர்கள் உண்மையில்
அனுபவிக்கிறார்கள் என அமைந்துள்ளது”என மேலும் அவர் கூறினார்.
“சுருக்கம் முதலில் எங்களுக்கு வந்த போது, இந்த பிராண்ட்க்கு அவர்கள் "சென்னை பெண்" சுற்றி
ஒரு உற்சாகம், சமகால படம் வேண்டும் என உறுதியாக இருந்தார்கள். எனவே நாங்கள் நவீன
மற்றும் அதே நேரத்தில் பாரம்பரிய கலாச்சாரத்தை நேசிக்கும் "சென்னை பெண்" என்ற சாரத்தை
கைப்பற்றிய ஒரு ஸ்கிரிப்ட் உருவாக்கினோம். பல கருத்துக்களைப் படித்த பிறகு, இறுதியாக ஒரு
இசைக்கு வந்தோம். நாங்கள் வாழ்க்கையில் கொண்டுவந்த மிகச் சிறந்த சோதனைகளில் இதுவும்
ஒன்றாகும். " என ரோட்ரன்னர் புரொடக்சன்ஸ். இயக்குநர், ராகுல் பார்தி கூறினார்.
இந்த பிரச்சாரத்தை ஊக்குவிக்க ஹிமாலயா டிஜிட்டல் ஊடகத்தினை தேர்ந்து எடுத்துள்ளது. இது
பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் உட்பட அனைத்து சமூக ஊடகங்களிலும்
பரப்பபடும். கூடுதலாக, மியூசிக் மேடையில் மற்றும் செல்வாக்காளர்களுடன் ஆக்கப்பூர்வமான
இணைப்புகள் மூலம் மேலும் செய்தியை அதிகரிக்கும்.
சென்னை பொன்னுக்காக இசையமைத்த புகழ்பெற்ற இசையமைப்பாளர் பிரசாந்த் பிள்ளை,
சென்னையின் உள்ளூர் ஆற்றல் ஒரு கவர்ச்சியுள்ள, அடி-தட்டுதல் ஆகியவற்றை
கொண்டுவந்துள்ளார். அமிர்தராவ் எழுதிய நகைச்சுவையான பாடல் பாலிவுட் நடன
இயக்குனரான ஆதில் ஷேக், நடனம் அமைக்கப்பட்டது இவர் பஜ்ரங்கி பைஜாவன், கபூர் அண்ட்
சன்ஸ் போன்றவற்றுக்கு நடனம் அமைத்தவர்.