வல்லூர் அனல் மின்நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி
திருவள்ளூர்: வல்லூர் அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது.
தேசிய அனல்மின் கழகத்திற்கு தமிழக அரசு நிலுவைத்தொகை வழங்காததால் வல்லூர்
அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து நிலுவைத்தொகையான ஆயிரத்து 156 கோடி ரூபாயில் முதற்கட்டமாக தமிழக அரசு 250 கோடி ரூபாய் வழங்கப்பட்டதை அடுத்து 2 மற்றும் 3-வது அலகில் இருந்து மின் உற்பத்தி துவங்கப்பட்டது