மே 10ல் சென்னை வருகிறார் அமித்ஷா: ஸ்மிருதி தகவல்

திருப்பூர்: திருப்பூரில் நடந்த பா.ஜ., நிர்வாகிககள் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது: பா.ஜ., தலைவர் அமித்ஷா வரும் மே மாதம்10,11,12 ம் தேதிகளில் தமிழகம் வர உள்ளார். 10 ,11ல் சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியிலும், 12ம் தேதி கோவையில் நடக்கும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார். உ.பி., உத்தரகாண்ட், கோவா உள்ளிட்ட சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்திலும் பா.ஜ., வெற்றி பெற நிர்வாகிகள் உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *