ஐரோப்பிய நாடுகளுக்கு சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து நேரடி விமானங்கள் தென் இந்தியா-வில் தடையற்ற விமான சேவைகளை வழங்குகிறது ஜெட் ஏர்வேஸ்

சென்னை, மே. 4:- இந்தியாவின் முதன்மையான விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்,  இரண்டு புதிய விமானங்களை அறிமுகப்படுத்தவுள்ளது. நேரடியாக சென்னை – பாரிஸ், பெங்களூரு – ஆம்ஸ்டர்டாம் இடையே இந்த சேவைகள் தொடங்கப்படுகின்றன. இந்த புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் பிற ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளுக்கு பயணிகள் தடையின்றி பயணிக்க முடியும். ஏர் பிரான்ஸ், கேஎல்எம் டச் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர் லைன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் கோட்ஷேர் ஒப்பந்தங்களைச் செய்துகொண்டுள்ளதன் மூலம் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளின் பல்வேறு நகரங்களுக்கு ஜெட் ஏர்வேஸ் சேவை வழங்கவுள்ளது.

அக்டோபர் 29-ம் தேதி முதல் சென்னை – பாரிஸ், பெங்களூரு -ஆம்ஸ்டர்டாம் இடையே புதிய சேவைகள் தொடங்கப்படவுள்ளன. பெங்களூர் – ஆம்ஸ்டர்டாம் இடையே விமான சேவை தினசரி இயக்கப்படும். அதே சமயம் சென்னை – பாரிஸ் இடையே வாரம் 5நாட்களுக்கு விமானங்கள் இயக்கப்படவுள்ளன. ஜெட் ஏர்வேசின் 9w 236 விமானம் பெங்களூருவில் இருந்து உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:25 மணிக்கு புறப்பட்டு ஆம்ஸ்டர்டாமுக்கு காலை 8:35-க்கு (ஆம்ஸ்டர்டாம் உள்ளூர் நேரம்) சென்றடையும்.   அதே போல் மறு மார்க்கத்தில் 9w 235 விமானம் ஆம்ஸ்டர்டாமில் உள்ளூர் நேரப்படி காலை 10:50-க்கு புறப்பட்டு இரவு 12:40-க்கு (உள்ளூர் நேரம்) பெங்களூர் வந்தடையும். இந்த விமான சேவைகள், ராயல் டச் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து வழங்கப்படுகின்றன.

ஜெட் ஏர்வேசின் 9w 128 விமானம் சென்னையில் இருந்து அதிகாலை 1:45-க்கு (உள்ளூர் நேரம்) கிளம்பி காலை 8:10-க்கு (பாரிஸ் உள்ளூர் நேரம்) பாரிஸ் சென்றடையும்.அக்டோபர் 29-ம் தேதி முதல் இந்த சேவைகள் அமலுக்கு வருகின்றன. இதேபோல் மறு மார்க்கத்தில் 9w 127 விமானம் பாரிசில் இருந்து காலை 10:10 மணிக்கு (பாரிஸ் உள்ளூர் நேரம்) கிளம்பி இரவு 12:15-க்கு (உள்ளூர் நேரம்) சென்னை வந்தடையும். இந்த விமானங்களுக்கு ஏர் பிரான்ஸ் மற்றும் டெல்டா ஏர்லான்ஸ் நிறுவனங்கள் கோட்ஷேர் ஒப்பந்த நிறுவனங்களாக உள்ளன. ஏற்கெனவே மும்பையில் இருந்து பாரிசுக்கு நேரடி விமான சேவை உள்ளது. அத்துடன் டெல்லி மற்றும் மும்பையில் இருந்து ஆம்ஸ்டர்டாமுக்கும் அங்கிருந்து டொரன்டோவுக்கும் விமான சேவைகளை ஜெட் ஏர்வேஸ் வழங்கி வருகிறது. அத்துடன் கூடுதலாக இந்த சேவைகள் வரும் அக்டோபர் 29-ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளன.

பெங்களூரு – ஆம்ஸ்டர்டாம் மற்றும் சென்னை – பாரிஸ் விமான சேவைகளை தொடங்குவதன் மூலம் இந்த நகரங்களுக்கு இடையே தடையற்ற விமான சேவையை வழங்கும் ஒரே நிறுவனம் என்ற பெருமையை ஜெட் ஏர்வேஸ் பெறுகிறது. இதன் மூலம் தொழில் ரீதியாக பயணங்கள் மேற்கொள்வோர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எளிதில் தடையின்றி பல நகரங்களுக்கு பயணிக்க முடியும்.

தென் இந்திய நகரங்களில் இருந்து உள்நாட்டு நகரங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கான  விமான சேவைகளை இயக்குவதில் அதிக ஆர்வத்தை ஜெட் ஏர்வேஸ் காட்டி வருகிறது.ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளுக்கு மக்கள் அதிகம் பயணிக்க வேண்டிய தேவை உள்ளதைக் கருத்தில் கொண்டு ஜெட் ஏர்வேஸ் இந்த சேவைகளை அறிமுகப்படுத்துகிறது. ஆம்ஸ்டர்டாம் மற்றும் பாரிஸ் நகரங்களுக்கு பெங்களூரு மற்றும் சென்னையில் இருந்து புதிய சேவைகளை ஜெட் ஏர்வேஸ் தொடங்குவதன் மூலம்,ஐரோப்பாவில் 35 நகரங்களுக்கும், அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் 24நகரங்களுக்கும் பயணிகள் தடையின்றி பயணிக்க முடியும். ஏர் பிரான்ஸ், கேஎல்எம் ராயல் டச் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ் போன்ற நிறுவனங்களுடன் கோட் ஷேர் ஒப்பந்தகங்களை ஜெட் ஏர்வேஸ் செய்து கொண்டுள்ளதன் மூலம் இது சாத்தியமாகவுள்ளது. தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 16 நாடுகளின் 20 நகரங்களுக்குதினசரி 150 விமானங்களை நேரடியாக இயக்கி வருகிறது.

புதிதாக தொடங்கப்படவுள்ள விமான சேவைகளுக்கு சலுகைக் கட்டண விவரங்களையும்ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னை – பாரிஸ் இடையே திரும்பிவருவதற்கான கட்டணம் உட்பட அனைத்தும் சேர்த்து சிக்கன வகுப்புக்கு ரூ. 33,999-ஆகநிர்ணயிக்கப்பட்டுள்ளது. சொகுசு வகுப்புக்கு (பிரீமியம்) ரூ. 129,999 ஆக கட்டணம்நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போல் பெங்களூரு ஆம்ஸ்டர்டாம் இடையே பிரிமீயம்வகுப்பில் பயணிக்க ரூ. 179,999 என்ற அடிப்படையில் குறைந்த பட்ச கட்டணம்தொடங்குகிறது. இவை அனைத்தும் முதலில் வருவோருக்கு முன்னிரிமை என்றஅடிப்படையில் வழங்கப்படும். இது தவிர ஜெட்எஸ்கேப்ஸ் என்ற பெயரில் விடுமுறைகால சிறப்பு தொகுப்பையும் (பேக்கேஜ்) ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வழங்குகிறது. இதில்ஒரு நபருக்கு ரூ. 71,310 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.திரும்பி வருவதற்கானகட்டணம், தங்குவதற்கான ஹோட்டல்கள், பயண காப்பீடு உட்பட அனைத்தும் இந்தகட்டணத்தில் அடங்கும்.

இது குறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவன இயக்குநர் கவுரங்க ஷெட்டி கூறுகையில், “ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு அதிக விமான சேவைகளை வழங்கி வருகிறது. பயணிகளுக்கு அதிக வசதிகளையும் சேவைகளையும் தருவதே எங்களது சிறப்பம்சம். இதுவே மற்ற நிறுவனங்களுக்கும் எங்களுக்குமான வேறுபாடு.தென் இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு தொழில் ரீதியாக பயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதைக் கருத்தில் கொண்டு தேவைக்கு ஏற்றவாறு சேவை வழங்கி வருகிறோம். இந்த புதிய விமான சேவைகளை பயணிகள் வரவேற்று நிச்சயம் ஆதரவு அளிப்பார்கள்.” என்றார். ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நீண்ட தூர வெளிநாட்டுப் பயணங்களுக்கு அதி நவீன சொகுசு விமானமான A330-ஐ இயக்குகிறது. மேலும் ஏப்ரல் 20-ம் தேதி முதல் சில விமானங்களை ஜெட் ஏர்வேஸ் விற்பனை செய்கிறது.

தற்போது ஆம்ஸ்டர்டாம் மற்றும் பாரிஸ் வழித்தடங்கள் மூலம் பெர்லின், பிரஸ்ஸல்ஸ்,கோபன்ஹேகன், டஸ்ஸல்டார்ப், எடின்பர்க், ஜெனிவா, கோதன் பெர்க், ஹம்பர்க்,ஹெல்சின்கி, மாட்ரிட், மான்செஸ்டர், ஓஸ்லோ, பிராக், ஸ்டாக் ஹோம், ஸ்டக்கார்ட்,வியன்னா, வெனிஸ், முனிச், லண்டன், டப்லின், ஜூரிச் ஆகிய நகங்களுக்கு ஜெட் ஏர்வேஸ் இணைப்பு ஏற்படுத்துகிறது.

இதேபோல் ஆம்ஸ்டர்டாம் மற்றும் பாரிஸ் வழித்தடங்கள் மூலம் வட அமெரிக்க நகரங்களான அட்லாண்டா, பாஸ்டன், சிகாகோ, சின்சினாட்டி, டெட்ராய்ட், ஹுஸ்டன்,லாஸ் ஏஞ்சல்ஸ், மியாமி, மின்னபோலிஸ், நியூயார்க், பிலடெல்பியா, பிட்ஸ்பர்க்,நெவார்க், போட்லாந்து, ரேலி-துர்ஹாம், சால்ட் லேக் சிட்டி, சான் பிரான்சிஸ்கோ,சியாட்டில், வாஷிங்டன், கால்கிரே, எட்மண்டன், மான்ட்ரியல், வான்கூவர், மற்றும் மெக்சிகோ சிட்டி ஆகிய நாடுகளுக்கு பயணிகள் பயணிக்க முடியும். இதேபோல் சென்னை மற்றும் பெங்களூரு வழியாக பயணிக்கும் பயணிகள் இந்தியாவில் 13 நகரங்களுக்கும் இலங்கை தலைநகர் கொழும்புக்கும் பயணிக்கும் வகையில் ஜெட் ஏர்வேஸ் நெட்வொர்க் இணைப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

ஜெட் ஏர்வேசின் இந்த நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்த தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், “கண்டங்களுக்கு இடையே தடையில்லாவிமான சேவைகளை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வழங்குகிறது. இது சுற்றுலத்துறைமட்டுமல்லாமல் தொழில் மற்றும் வணிகத் துறையும் மேம்பட உதவும். மேலும் இந்தியா– பிரான்ஸ் நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகளும் மேம்படும்.” என்றார்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் புதிதாக தொடங்கவுள்ள விமான சேவைகளுடன் சேர்த்துகார்கோ சேவைகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இதன் மூலம் தினமும் ஐரோப்பியநாடுகளில் இருந்து சுமார் 30 டன் எடை கொண்ட சரக்குகளை இறக்குமதி செய்யமுடியும். ஏற்கெனவே இவை மும்பை மற்றும் டெல்லி வழியாக கொண்டுவரப்படுகின்றன.இனி நேரடியாக தென் இந்திய நகரங்களுக்கு கொண்டுவரப்படுவதால் நேரம் மிச்சமாகும்.

மலர்கள், பழங்கள், மருந்துப் பொருட்கள், இயந்திரங்கள், ஜவுளி வகைகள், மின்சாரமற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆட்டோமொபைல் பாகங்கள், உணவு வகைகள்போன்றவற்றை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனதுகார்கோ சேவை மூலம் வாய்ப்பு வழங்குகிறது. இந்த  வழித்தடங்களில் ஜெட் ஏர்வேஸ்அதி நவீன ஏர்பஸ் A 330 சொகுசு விமானங்களை இயக்கவுள்ளது. புதியவழித்தடங்களுக்கான முன்பதிவு தற்போது நடைபெறுகிறது.

 

ஜெட் ஏர்வேஸ் பற்றி…

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இந்தியாவின் முதன்மையான விமான சேவை நிறுவனமாகும்.இந்நிறுவனம் இந்தியாவின் பல நகரங்களில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளின்65 நகரங்களுக்கு விமான சேவைகளை வழங்கி வருகிறது. இந்தியாவின் மாநில தலைநகரங்கள், மெட்ரோ நகரங்கள் மற்றும் முக்கிய நகரங்கள் அனைத்தையும் இணைக்கும் வகையில் ஜெட் ஏர்வேஸ் சேவை வழங்கி வருகிறது. இது தவிர தென் கிழக்கு ஆசிய நாடுகள், தெற்கு ஆசிய நாடுகள், ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளுக்கும் ஜெட் ஏர்வேஸ் சேவை வழங்குகிறது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தற்போது போயிங் 777-330 ERS, ஏர்பஸ் A 330-200/300, போயிங் 737 போன்ற விமானங்களை இயக்கி வருகிறது. ஏர்பெர்லின், ஏர் செர்பியா, ஏர் செஷல்ஸ், அலிடாலியா, எடிஹாட் ஏர்வேஸ் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஜெட் ஏர்வேஸ் செயல்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *