குல்பூஷண் குறித்து தகவல் ஏதுமில்லை: வெளியுறவு அமைச்சகம்

டில்லியில் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் பாக்லே அளித்த பேட்டி: குல்பூஷண் ஜாதவை தூதரக அதிகாரிகள் சந்திக்க 16 முறை அனுமதி கேட்டும் கிடைக்கவில்லை. அவரது தாயார் அளித்த மனு நிலை பற்றி தகவல் தெரிவிக்கவில்லை. நமது விண்ணப்பம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக சர்வதேச கோர்ட் தகவல் அளித்துள்ளது. குல்பூஷண் ஜாதவ் எங்கு வைக்கப்பட்டுள்ளார் மற்றும் அவரது உடல்நிலை குறித்து தகவல் ஏதுமில்லை. இந்த பிரச்னையை தீர்க்க அவரது குடும்பத்தினர் பாகிஸ்தான் செல்ல வேண்டும். இதற்காக அந்நாடு விசா வழங்க வேண்டும். ஆனால், பாகிஸ்தான் இதனை வழங்கவில்லை.
துப்பாக்கி முனையில் திருமணம் செய்து வைக்கப்பட்ட உஸ்மா, கடந்த திங்கட்கிழமையன்று மாஜீஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் தூதரகத்தில் பத்திரமாக உள்ளார். அவர் பத்திரமாக இந்தியா திரும்ப தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். இது தொடர்பாக அந்நாட்டுடன் தொடர்பு கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.