சென்னை: தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு எழுதிய கடிதம்: மாநில விஜிலென்ஸ் கமிஷனரை நியமிக்க தலைமை செயலாளரை அறிவுறுத்த வேண்டும். அமைச்சர்கள் மீது பல ஊழல் புகார்கள் எழுந்துள்ள நிலையில், லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையரை நியமிக்க வேண்டும். சுதந்திரமாக செயல்பட கூடிய கமிஷனர் ஒருவரை பணியமர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.