பார்லியில் பால் கொடுத்து அசத்திய பெண் எம்.பி.
சிட்னி: ஆஸ்திரேலியா பார்லிமென்ட் வரலாற்றில் முதல் முறையாக, பெண் எம்.பி., ஒருவர் தன் கைக்குழந்தைக்கு பால் கொடுத்து அசத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியா பார்லிமென்ட்டின் மேல்சபையில் எம்.பி.,யாக இருப்பவர் லாரிசா வாட்டர்ஸ். அவருக்கு சமீபத்தில் இரண்டாவது குழந்தை பிறந்தது. பார்லிமென்ட்டில், நேற்று ஒரு ஓட்டெடுப்பு நடந்தது. இதில் பங்கேற்க லாரிசா குழந்தையுடன் வந்து இருந்தார். சபை நடந்து கொண்டிருக்கும் போது குழந்தைக்கு பால் கொடுத்து அசத்தினார். இது குறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘ பார்லிமென்ட்டில் பால் குடித்த முதல் குழந்தை என் மகள் அலியா என்பது பெருமையாக இருக்கிறது’ என, குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன் ஆஸ்திரேலிய பார்லிமென்ட்டுக்குள் குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது. எனினும், கடந்த ஆண்டு திருத்தப்பட்ட விதிகளின்படி, குழந்தைக்கு பால் கொடுக்கும் அளவுக்கு நிலைமை மாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.