கரூரில் சொகுசு கார் மோதி மாணவர்கள் பலி

கரூர்: நாகை மாவட்டம், குத்தாலம் தாலுகா திருவாடுதுறை பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக், இவர் வேலை விஷயமாக கோவைக்கு சொகுசு காரில் சென்ற போது, கரூர் மாவட்டம், லாலாபேட்டை ரயில்வே மேம்பாலம் அருகே இரு சக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதினார். இதில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்த இரு வாலிபர்கள், தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து முடித்த மாணவர்கள் என்றும் தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அருகே உள்ள பிள்ளையார் பட்டி பகுதியை சார்ந்த அசோக் என்பவரின் மகன் அணிஸ் ( 20) மற்றும் அதே தஞ்சாவூர் மாவட்டம், நாலுகால் மண்டபம் பகுதியை சார்ந்த ஆகாஸ் ( 19) என்பது தெரியவந்துள்ளது. மேலும் இருவரது உடல்கள் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.லாலாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார். உயிரிழந்த இரு மாணவர்களோடு, அதே பகுதியை சார்ந்த கலைச்செல்வன், தர்ஷன், கிரி ஆகிய மொத்தம் 6 மாணவர்கள் 3 இரு சக்கர வாகனங்களில் இன்பச்சுற்றுலாவிற்காக ஊட்டிக்கு சென்று திரும்பிய போது இந்த விபத்து நடந்தது. இந்த விபத்தினால் நாகப்பட்டினம் டூ கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இன்பச்சுற்றுலாவிற்காக ஊட்டிக்கு இரு சக்கர வாகனங்களில் சென்று திரும்பிய இருவர் அதிகாலையில் பலியான சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *