கோக-கோலா இந்தியா நிறுவனம் தலைமைப் பொறுப்பில் முக்கிய மாற்றத்தைச் செய்துள்ளது. கோக-கோலா

தமிழகத்தைச் சேர்ந்த டி. கிருஷ்ணகுமார் கோக-கோலா இந்தியாவின் தலைவராக நியமனம்

வெங்கடேஷ் கினி விலகல்

கோக-கோலா இந்தியா நிறுவனம் தலைமைப் பொறுப்பில் முக்கிய மாற்றத்தைச்
செய்துள்ளது. கோக-கோலா இந்தியா மற்றும் தென்மேற்கு ஆசியா-வின் தலைவராக
தமிழகத்தைச் சேர்ந்த திருமலை கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். ‘கேகே’ என
அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் இந்துஸ்தான் கோக-கோலா பெவரேஜஸ் பிரைவட் லிமிடெட்
நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் தென்மேற்காசிய பிராந்திய
இயக்குனராகவும் பதவி வகித்து வந்தவராவார். கோக-கோலா இந்தியா நிறுவனத்தின்
முன்னாள் தலைவர் வெங்கடேஷ் கினி பொறுப்பிலிருந்து விலகியதைத் தொடர்ந்து தலைமையை
கிருஷ்ணகுமார் ஏற்பதாக கோக-கோலா நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னாள் தலைவர்
வெங்கடேஷ் கினி 19 ஆண்டு காலம் இந்நிறுவனத்தில் பணியாற்றியவர் என்பது
குறிப்பிடத்தக்கது.

திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்டு விளங்கும் கிருஷ்ணகுமார், சென்னையில்
பிறந்தவராவார். சென்னை வித்யா மந்திரில் பள்ளிப் படிப்பும், லொயோலா கல்லூரியில்
பட்டப் படிப்பும் படித்த இவர், பின்னர் கிண்டி பொறியியல் கல்லூரி, ஐ.ஐ.எம்.
பெங்களூரு மற்றும் வார்டன் தொழிற்பள்ளி, அமெரிக்காவில் மேற்படிப்பை
மேற்கொண்டார்.

முருகப்பா குழுமம், ஹென்கல் இந்தியா, ஏசியன் பெய்ன்ட்ஸ், இஃப்கோ குழுமம்,
துபாய் ஆகிய நிறுவனங்களில் முக்கிய பதவிகளை வகித்தவரான கிருஷ்ணகுமார்,
முருகப்பா நிறுவனத்தின் மெல்டிராக் கேசட், காப்பி பைட், லாக்டோ கிங் மற்றும்
கோகோனட் பஞ்ச் போன்ற புகழ்பெற்ற தயாரிப்புகளில் முக்கிய பங்காற்றியவராவார்.

2004 முதல் கோக-கோலா நிறுவனத்தில் பணியாற்றிவரும் இவர் ஆஸ்திரேலியா மற்றும்
இந்தோனேசியாவின் கோக-கோலா அமட்டில் குழு, இண்டர்நேஷனல் பெவரேஜஸ் பிரைவட்
லிமிடெட், வங்காள தேசம் மற்றும் கோக-கோலா பாட்டிலர்ஸ் ஸ்ரீ லங்கா லிமிடெட் ஆகிய
அமைப்புகளில் முக்கிய அங்கத்தினராக செயல்பட்டுவருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *