அம்பேத்கர் மக்கள் படை போராளி மு.மதிபறையனார் பொன் விழா
சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை,இராசரத்தினம் கலையரங்கத்தில் அம்பேத்கர் மக்கள் படை போராளி மு.மதிபறையனார் பொன் விழா மற்றும் போர்களத்திற்கு அகவை 50 கவிதை நூல் வெளியீடு, சாதி ஆணவப் படுகொலையை தடுத்து மத்திய மாநில அரசே புதிய சட்டம் இயற்று என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. தலைமை மாநில இலக்கிய அணி செயலாளர் கவிஞர் கு.தென்னவன், நூல் வெளியீட்டு கருத்துரை கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர், ஆர்.நல்லகண்ணு, நூல் பெற்று கருத்துரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) நீதியரசர் கே.சந்துரு, முனைவர் செந்தில் மா.இ.பொ.செயலாளர்,வழக்கறிஞர் க.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றம்,நன்றியுரை ம. பகத்சிங் , ம.பாரத் மற்றும் ஏராளமானவர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.