இரு சிறுநீரகங்களிலும் கல் அடைப்பால் அவதிப்பட்ட நான்கு வயதுக் குழந்தைக்கு ஆர்.ஜி ஸ்டோன்

சென்னை, 16 மே 2017: இந்தியாவின் முன்னணி சிறுநீரகவியல் மற்றும்

லேப்ராஸ்கோப்பிச் சங்கிலித் தொடர் மருத்துவமனையான, ஆர்.ஜி

ஸ்டோன் யுராலஜி அன்ட் லேப்ராஸ்கோப்பி மருத்துவமனையின்

சென்னை கிளையில், இரு சிறுநீரகங்களிலும் கல் அடைப்பால்

பாதிக்கப்பட்டு, அதன் காரணமாகச் சிறுநீரகப் பாதை நோய்த் தொற்றால்

அவதிப்பட்டு வந்த, ரத்த சோகை குறைபாடு கொண்ட நான்கு வயது பெண்

குழந்தைக்கு வெற்றிகரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

நான்கு வயதான ரிச்சாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உடல் எடை 13

கிலோ. இவருக்கு ஆறு மாதங்களுக்கு மேலாகக் காய்ச்சல் பிரச்னை

தொடர்ந்து ஏற்படவே சென்னை ஆர்.ஜி ஸ்டோன் மருத்துவமனைக்குக்

கடந்த ஆண்டு (2016) செப்டம்பர் மாதம் வந்தார். மருத்துவமனையில் ரிச்சா

அனுமதிக்கப்பட்டபோது, மேற்கொண்ட பரிசோதனையில் அவரது

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 8.1 கிராம் என்ற அளவில்தான்

இருந்தது. மருத்துவமனையின் மூத்த, கைதேர்ந்த மருத்துவர்கள்,

மருத்துவமனையின் மெடிக்கல் டைராக்டரும் தலைமை சிறுநீரகவியல்

நிபுணருமான டாக்டர் ஆர்.விஜயகுமார் தலைமையில் ரிச்சாவுக்குச்

சிகிச்சை அளித்தனர். அப்போது, அவரது இரண்டு சிறுநீரகங்களிலும்

சிறுநீரகக் கல் இருப்பதும் அதுவும் ஒவ்வொன்றும் 4.5 செ.மீ அளவில்

இருப்பதையும் கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து, ரிச்சாவின் வலது

பக்கத்தில் உள்ள கல்லை அகற்ற இரண்டு கட்டங்களில் சிகிச்சை அளிக்க

முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டுச் செப்டம்பர் மாதம் 13ம் தேதி

அவருக்கு வலது பக்க சிறுநீரகத்தில் உள்ள கல்லை அகற்ற

பெர்குயுட்டேனியஸ் நெஃப்ரோலித்தோக்டமி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, நவம்பர் மாதம் 23ம் தேதி கால் அகற்றப்பட்டது. வலது

பக்கம் வெற்றிகரமாகக் கல் அகற்றப்பட்டதால், இடது பக்க

சிறுநீரகத்துக்குக் கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி ஒரே

அறுவைசிகிச்சையில் கல் அகற்றப்பட்டது.

தற்போது, ரிச்சாவுக்குச் சிறுநீரகக் கல் அடைப்பு, வலி போன்ற பாதிப்பு

ஏதும் இல்லை. சிறுநீரகப் பாதை நோய்த் தொற்றும் இல்லை. அடிக்கடி

காய்ச்சல் வருவதும் இல்லை. தற்போது மேற்கொள்ளப்பட்ட ரத்த

பரிசோதனையில் அவரது ஹீமோகுளோபின் அளவும் 11.2 கிராமாக

உயர்ந்திருக்கிறது. அவரது உடல் எடையும் அதிகரித்திருக்கிறது. ரிச்சாவை

தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை, கண்காணிப்பில் வைத்திருக்கும்படி

அவரது பெற்றோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மூன்று மாதங்களுக்கு ஒரு

முறை, பயோ கெமிக்கல் பரிசோதனை செய்துகொள்ளும்படி

அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்துச் சென்னை ஆர்.ஜி ஸ்டோன் யுராலஜி அன்ட்

லேப்ராஸ்கோப்பி மருத்துவமனை தலைமை சிறுநீரகவியல் நிபுணரும்,

மருத்துவமனையின் இயக்குநருமான டாக்டர் ஆர்.விஜயகுமார் அவர்கள்

கூறுகையில், "சிறுமிக்குச் சிறுநீரகக் கல் இருப்பதைக் கண்டறிந்து

சொன்னபோது, அவளது பெற்றோர் அதிர்ச்சியும் வியப்புமே அடைந்தனர்.

பெரியவர்களுக்குத்தானே சிறுநீரகக் கல் பிரச்னை வரும். குழந்தைக்கு

எப்படி வரும்? என்று கேட்டனர். சிறுநீரகக் கல் பெரியவர்களுக்கு

மட்டுமல்ல… சிறுவர்களுக்கும் கூட ஏற்படலாம். குழந்தைகள், பச்சிளம்

குழந்தைகளும் கூட மிகச்சிறிய அளவில் சிறுநீரகக் கல் பிரச்னையால்

பாதிக்கப்படுகின்றனர். இதற்கு, அவர்கள் உடலின் வளர்ச்சிதை மாற்ற

செயல்திறன் குறைபாடு காரணமாக, போதுமான அளவில் நச்சுக்களை

உடலால் வெளியேற்ற முடியாமைதான் காரணம். இப்படி நச்சுக்கள்

வெளியோமல் தேங்கும்போது, அது கல்லாக உருவெடுக்கிறது. இதைக்

கண்டறிந்து சிகிச்சை பெறாவிடில், அது சிறுநீரகச் செயல் இழப்பைக் கூட ஏற்படுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *