பெர்சிபியோ – ஸ்கில்சாஃப்ட் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய அதி நவீன ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் கற்றல் தளம்
சென்னை: 2017 மே 17 : இ-லேர்னிங்க் எனப்படும் மின் கற்றலில் உலகளவில் முன்னணி
வகிக்கும் ஸ்கில்சாஃப்ட், தனது மேக அடிப்படையிலான அதி நவீன ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட்
உள்ளடக்க வழங்கல் மற்றும் கற்றல் தளமான பெர்சிபியோ அறிமுகம் குறித்த அறிவிப்பை
இன்று வெளியிட்டது. கற்போர் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதுடன், முழுமையான
அனுபவத்தைப் பெறும் வகையிலும் பெர்சிபியோ வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘அறிவைப் பெறுதல்’ என்பதன் இலத்தீன் சொல்லான ‘பெர்சிபியோ’ மின் கற்றல் துறையை
தளமுடன் மாற்றும் ஸ்கில் சாஃப்ட் உறுதிமொழியை பிரதிபலிக்கிறது. பயனீட்டாளர்
அனுபவத்தை மனதில் வைத்துக் கொண்டு, எதிர்கால வேலை வாய்ப்பை மேம்படுத்தும் வகையில்
கற்போரை ஊக்குவிக்கும். இந்த அணுகுமுறையுடன், ஸ்கில் சாஃப்ட் கற்போர், மேலாளர்கள்,
செயல் முறை நிர்வாகிகள் ஆகியோருடன் ஒருங்கிணைந்து செயலபட உருவாக்கி உள்ள தளம்,
கற்பவர்களை ஈடுபடுத்தி மிகச் சிறந்த முடிவுகளை வழங்கும்.
இது குறிஹ்து ஸ்கில்சாஃப்ட் சிடிஓ அப்ரதிம் புரகயஸ்தா கூறுகையில் ‘கடந்த 20 ஆண்டுகளாக
உள்ளீடு மற்றும் கற்றலில் தொடர்ந்து கணிசமாக முதலீடு செய்து வருகிறோம். உள்ளீடு
அளவிற்கு தள கற்றல் அனுபவமும் முக்கியம் என்பதை அங்கீகரித்துள்ளோம். சந்தை,
வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் ஆகியோருடனான விரிவான ஆய்வைத் தொடர்ந்து
பெர்சிபியோவை உருவாக்கி உள்ளோம். இந்தப் புத்தம் புதிய தளம் மீது தொடர்ந்து கணிசமாக
முதலீடு செய்வதன் மூலம் மிகச் சிறந்த தள கற்றல் அனுபவத்தை எங்கள் வாடிக்கையாளர்கள்
மற்றும் அவர்களின் பயனீட்டாளர்களுக்கு வழங்குகிறோம். சந்தையின் முன்னணி வகிக்கும்
நிறுவனம் என்னும் வகையில் மிகச் சிறந்த கற்றல் அனுபவங்களை மிக உயரிய அணுக்கத்
தரத்துடன் வழங்குவதில் கவனம் செலுத்துவோம்’ என்றார்.
அதி நவீன ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் சந்தை ஆய்வுத் திறன் மற்றும் தடையற்ற
கண்டுபிடிப்புகளுடன், பெர்சிபியோவின் தனிப்பட்ட முகப்புப் பக்கத்தில், கற்போர் தங்கள்
இலக்குகளை எட்டும் பாதை, பரிந்துரைக்கப்பட்ட அறிமுகம், பிரபல உள்ளீடு, ஆகியவை இடம்
பெறும். கற்போரின் பிரத்யேகத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில்
வாடிக்கையாளர்களுக்கான க்யூரேடெட் சேனல்கள் இதன் ஏனைய விரிவான அம்சங்களாகும்.
குறிப்பிட்ட தலைப்பில் அனைத்து ஆதாரங்களும் கிடைக்கும் வகையில் கற்போருக்கு இந்த
சேனல்கள் ஏளிதான வழியாகும். அதி நவீன புதிய ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் தேடு எந்திரத்துடன்,
கற்போர் தங்களுக்கான தேவை என்ன என்பதுடன், எப்போது என்பதையும் எளிதில்
கண்டுபிடிக்கலாம்.
இந்தப் புதிய உடனடி செயல் டேஷ்போர்ட், செயலைக் கண்காணிக்கவும், நுகர்வைத் தெரிந்து
கொள்ளவும் நிர்வாகிகளுக்கு உதவும். இப்புதிய திறன்களுடன், மேலாளர்கள் பொலிவுறு
செயல்களை அடையாளம் காணவும், அவற்றின் குறிப்பிட்ட கற்பவர்களுடன், உள்ளீடு
பயன்பாட்டை அதிகரிக்கவும் இயலும்.ஐடிசி, வணிக ஆலோசனை & ஐடி கல்வி, செயல் முறை துணைத் தலைவரான குஷிங்க்
ஆண்டர்சன் பேசுகையில் ‘பயிற்சிக்கான உள்ளீடுகளைக் கொண்ட மிகச் சிறந்த நூலகத்தைக்
கொண்டுள்ள ஸ்கில்சாஃப்ட் பிரபல மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சிறு நடுத்தர நிறுவனங்களுடன்
மேம்பட்ட உறவுகளைக் கொண்டுள்ளது. வளரும் தேவை மற்றும் வேகமான மாற்றம் நடைபெறும்
இத்தருணத்தில் நேரத்தை வீணடிக்க யாருக்குமே தயாராக இல்லை. கற்றல் தேவைகளை நிறைவு
செய்யக் கற்போர் வரைந்து விடைகளைக் காண வேண்டும். பெர்சிபியோ ஆதரவுடன், ஸ்கில்
சாஃப்ட் கற்போருக்கான திறன் நேரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது’ என்றார்.