ஏர்செல் செயலியில் பிரத்தியேக தரவு மற்றும் அழைப்பு சலுகைகள் அறிமுகம்
சென்னை, மே 2017: இந்தியாவின் முன்னணி தகவல் தொடர்பு நிறுவனமாகிய
ஏர்செல், வாடிக்கையாளர்களின் அதிகரித்து வரும் ரீசார்ஜ் தேவையை கருத்தில்
கொண்டு, தங்களுடைய செயலியில் பிரத்தியேக தரவு மற்றும் அழைப்பு
சலுகைகளை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ஏர்செல்
வாடிக்கையாளர்கள் 10 நாட்களுக்கு செல்லுபடியாகக்கூடிய 1 ஜிபி 3ஜி தரவை
ரூபாய் 76க்கு பெறலாம், மேலும் 50 ரூபாய்க்கு மேற்பட்ட அனைத்து தரவு
ரீசார்ஜ்க்கும் 100 எம்பி தரவை இலவசமாக பெறலாம்.
வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப இத்தகைய அற்புத சலுகைகள்
வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஏர்செல்லின் தலைமை விற்பனை அதிகாரி, திரு. அனுபம் வாசுதேவ்
கூறுகையில், ஏர்செல் எப்போதும் தங்களது வாடிக்கையாளர்களின்
தேவைகளை உணர்ந்து, அவர்கள் செலுத்தும் பணத்திற்கு மதிப்பளிக்கும்
வகையில் பல்வேறு உயர்வான சேவைகளை வழங்குவதில் மிகுந்த
மகிழ்ச்சியுடன் பணியாற்றி வருகிறது. எங்களுடைய செயலி மூலம் நாங்கள்
எங்கள் வாடிக்கையாளர்களின் திட்டங்கள், பயன்பாடு மற்றும் அவர்களின்
விருப்பத்திற்குரிய சேவைகளை அறிந்து வருவதுடன், அதற்கேற்ப எங்களது
தயாரிப்புகளின் அடிப்படைகளை அமைத்து வருகிறோம். கடந்த காலங்களில்
இத்தகைய தயாரிப்புகளில் நாங்கள் பல வெற்றிகளை அடைந்துள்ளோம்,
மேலும் இத்தகைய தயாரிப்புகள் எங்களது வாடிக்கையாளர்களின் வசதிக்கு
ஏற்புடையததாக இருப்பதுடன் அவர்கள் எங்களுடன் நீடித்து இருப்பதற்கு
வழிவகை செய்கிறது என்று கூறினார்.
மேலும் ஏர்செல் ரூபாய் 86க்கு முழு டாக் டைம் வழங்குவதுடன், தங்கள்
செயலியை பதிவிறக்கம் செய்பவர்களுக்கு 100 எம்பி தரவை இலவசமாக
வழங்குகிறது. இச்செயலி சமீபத்தில் தரவு பரிவர்த்னைக்கான சிறந்த
கண்டுபிடிப்புக்காக மணி டெக் அவார்ட் என்னும் விருதை பெற்றுள்ளது.
இச்செயலி வளர்ந்து வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் அதிகரித்து வரும் தரவு நுகர்வு தேவையை வெற்றிகரமாக வழங்கி வருவதுடன், தரவு கடன்,ரீசார்ஜ் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கி வருகிறது.