சென்ஹெசர் ஹெச்இ 1 அறிமுகம் மூலம் மிகச் சிறந்த ஆடியோவில் புதிய அத்யாயம் உலகின் மிகச் சிறந்த மற்றும் அசத்தல் ஹெட்ஃபோன் #பாரம்பரியத்தின் மறுபிறப்பு

           

சென்னை:: ஜெர்மன் ஆடியோ தயாரிப்பில் சிறந்து விளங்கும் சென்ஹெசர் இந்தியாவில்

ஆடியோஃபைல் ஒலிகளுக்கான எல்லைகளுக்கு மறு விளக்கம் அளிக்கும் வகையில்,

பாரம்பரிய ஆர்ஃபெஸின் அடுத்த வாரிசாக, உலகின் மிகச் சிறந்த மற்றும் அசத்தல்

சென்ஹெசர் ஹெச்இ-1 ஹெட்ஃபோனை இன்று அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தியச்

சந்தையில் ஆடியோ எதிர்காலத்தை உண்மையிலேயே வடிவமைக்கும் வகையில்

சென்ஹெசர் விளங்குகிறது என்பதற்கு சென்ஹெசர் ஹெச்இ-1 சான்றாகும். புதிய

ஆடியோ அதிசயமாக, வித்யாசமான ஆம்பிளிஃபையர் கருதுகோளுடன், உலகம் இதற்கு

முன்பு கண்டிராத வகையில், கவனமுடன் தேர்ந்தெடுக்கப் பொருட்களால், மிக உயர் ரகக்

கைவினைத் தயாரிப்பாகும். ஹெச்இ-1 இந்தியாவில் 2017 மே முதல் ரூ 45,00,000/-க்குக்

கிடைக்கும்.

இதற்கு முந்தைய ஆடியோ அமைப்புகளில் இதுவரை அளவிடப்படாத மனிதனின் செவித்

திறனைத் தாண்டிய அலைவரிசை மற்றும் மிகக் குறைந்த மொத்த ஒலிச் சிதறல்

ஆகியவையே சென்ஹெசர் ஹெச்இ-1 தொழில்நுட்பத்தின் சிறப்பம்சங்களாகும்.

ஒரு கச்சேரியில் அமர்ந்து கொண்டும், துல்லியமான இசையைக் கேட்பது போன்ற ஹை

எண்ட் ஹெட்ஃபோன்கள் உருவாக்கம்; இதற்கு முன் எப்போதுமே கேட்காத வகையில்

புதிய தரம் உருவாக்கம்; இவையே சென்ஹெசரின் தொலைநோக்குச் சிந்தனையாகும்.

1990/91 இல் இந்த ஆடியோ ஸ்பெஷலிஸ்ட் இவற்றைச் சாதித்துள்ளது. சென்ஹெசர்

ஹெட்ஃபோன்களில் உள்ள செயல்பாட்டுக் குறைபாடு தொடர்பான முந்தைய

எண்ணங்கள் அனைத்தையும் புறந்தள்ளும் வகையில் மிகப் பெரிய பொறியியல்

கண்டுபிடிப்புடன் ஆடியோ உலகில் மிகப் பெரிய புயலைக் கிளப்பியது. ஹெச்இ 1

எலெக்ட்ரோ ஸ்டாடிக் ஹெட்ஃபோனில் உள்ள அசத்தல் 500 வி ட்யூப் ஆம்ப்ளிஃபையர்

ஆடியோ துறையில் ஐகானாகத் திகழ்ந்ததுடன், இன்று வரை மிகச் சிறந்த

ஹெட்ஃபோனாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

பாரம்பரிய ஆர்ஃபெஸ் அறிமுகமாகி 25

ஆண்டுகள் கடந்த நிலையில் சென்ஹெசர்

மீண்டும் தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமாகும்

எல்லைகளைக் கடந்து சிறப்பான ஆடியோ

தயாரிப்பில் புதிய அத்தியாயத்தைத் தொடங்க

உள்ளது. புத்தம் புதிய ஹெச்இ1 துல்லியமான

பொறியியல் திறன் மற்றும் அதி நவீன

தொழில்நுட்பத்தின் இணைந்த வித்யாசமான

கூட்டு முனைவாகும். ஈடு இணையற்ற ஒலி அனுபவமும் துல்லியமான இசை இன்பமும்

இதன் மூலம் கிடைப்பது நிச்சயம்.

இது குறித்து சென்ஹெசர் சிஇஓ டாக்டர் ஆண்ட்ரியாஸ் சென்ஹெசர் கூறுகையில்

‘பாரம்பரிய ஆர்ஃபெஸுக்கு வாரிசாக அடுத்த பொருளைத் தொழிற்துறைக்கு ஆதாரப்

பொருளாக உருவாக்க, சென்ஹெசர் புதிய தொழில்நுட்பத் தீர்வுகளில் கடுமையாக

உழைத்தது. மிகச் சிறந்த பொருட்களைத் தேர்ந்தெடுக்க, ஏற்கனவே

பரிசோதனைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட தர அணுகுமுறைகளைத் தொடர்ந்து

உபயோகப்படுத்தியது. கடந்த பத்தாண்டுகளாகப், பொறியியல் மற்றும் வடிவமைப்பு

நிபுணர்கள் புதிய பொருளைக் கண்டுபிடிக்கத் தங்களை முழுமையாக அர்ப்பணித்து ஈடு

இணையற்ற இந்த அதி நவீன ஹெட்ஃபோனை உருவாக்கி உள்ளனர். இந்தியச்

சந்தைக்கு பெஞ்ச்மார்க் அளவுகோளாக இருக்கும் இந்த இணையற்ற பொருள் குறித்து

நாங்கள் பெருமைப்படுகிறோம். ஹெச்இ 1 எங்கள் நிறுவனத்தின் புதுமையான

திறன்களுக்கும், ஊழியர்களின் கூட்டு முனைவிற்கும், துல்லியமான ஒலியை வழங்கும்

உறுதிப்பாட்டிற்கும் அத்தாட்சியாகத் திகழும்’ என்றார்.

புதிய அறிமுகம் குறித்து நுகர்வோர் பிரிவு இயக்குனர் கபில் குலாதி கூறுகையில் ‘உலகின்

மிகச் சிறந்த ஹெட்ஃபோன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆடியோஃபைல் துறையில் இந்தியா மிகப் பெரிய மற்றும் வேகமாக வளரும் சந்தைகளில்

ஒன்றாக உருவெடுத்துள்ளது. இந்த ஹெட்ஃபோன்கள் அறிமுகம் மூலம் மீண்டும் புதிய

பெஞ்ச்மார்க் அளவுகளை உருவாக்கி உள்ளோம். சென்ஹெசரில் உள்ள நாங்கள் மிகத்

துல்லியமான ஒலியை வழங்க ஹை எண்ட் ஆடியோ உலகின் எதிர்காலத்தை மறு

வடிவமைத்து வருகிறோம்’ என்றார்.

ஈடு இணையற்ற ஒலிக்காக பேடெண்ட் ஆம்ப்ளிஃபையர் கருதுகோள்

ஆம்ப்ளிஃபயரின் நடுப் பக்தியில் உள்ள எட்டு வாக்யூம் ட்யூப்கள் உள்ளே

வரும் சமிஞையை ஆய்வு செய்யும். ட்யூப் ஆம்ளிஃபயர்களில் உள்ள

சிறப்பம்சம் அவற்றின் உயர்தர இம்பல்ஸ் புராசஸிங்க் ஆகும்.

இருப்பினும் இதிலுள்ள பிரச்சினை காற்றில் வரும் சத்தத்தையும் ஈர்த்துக்

கொள்வதுதான். எனவே இதற்கான தீர்வாக ஆம்பிளிஃபையர் கூடு

கிரானுலர், கேரரா பளிங்கு ஆகியவற்றில் உருவாக்கப்பட்டு

ஆம்பிளிஃபியயருடன் பொருத்தப்பட்டுள்ளது. இணைக்கப்பட்ட

ட்யூப்கள் அகற்றமும், பளிங்கின் ஈரத் தன்மையும் இணைந்து சத்தத்தை

பெருமளவு குறைக்கும். ட்யூப்களில் உள்ள, பேடெண்ட்

காப்புரிமைக்காகக் காத்திருக்கும், உயர் தர க்வார்ட்ஸ் கண்ணாடி

பல்புகள் சுற்றுப்புறங்களிலிருந்து அவற்றைப் பாதுகாக்கும்.

ட்யூப் ஆம்பிளிஃபையர் நிலையைத் தொடர்ந்து பேடெண்ட் உரிமை பெற்ற அல்ட்ரா ஹை

இம்பல்ஸ் ஆம்பிளிஃபையர் நிலை ஹெட்ஃபோன்களின் கிண்ணங்களில் நேரடியாக

ஒருங்கிணைக்கப்படுகிறது. இது ஏனைய பொருட்களிலிருந்து கிடைக்கும் திறனுடன்

ஒப்பிடுகையில் 200% அதிகமாகும். எலெக்ட்ரோஸ்டேடிக் ஹெட்ஃபோன்களில் உள்ள

ஆம்பிளிஃபையர் மின்னாற்றல் ஹெட்ஃபோனுக்கும் ட்யூப் ஆம்பிளிஃபையருக்கும்

இடையே உள்ள கம்பி வடம் காரணமாக இழப்பிற்கு உள்ளாகும். ஒலி அலைகளை

உருவாக்க மின் ஆற்றலில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எனவே

சென்ஹெசர் அணுகுமுறை மாறும் வோல்டேஜை அதிக வோல்டேஜுக்கு கம்பி வடத்தின்

தொடக்கத்திலேயே ஆம்பிளிஃபை செய்யாமல் எந்த இடத்திலே தேவையோ, அதாவது,

ஹெட்ஃபோன்களில் உள்ள கோல்ட் வேபோரைஸ்ட் செராமிக் எலெக்ட்ரோட்களில்,

நேரடியாகவே மேற்கொள்ளும்.

இந்த வடிவமைப்பில் உள்ள மிகச் சிறந்த அனுகூலம் ஆம்பிளிஃபையருக்கும்,

டயாஃப்ரமுக்கும் நடுவேயுள்ள மிகக் குறைந்த இடைவெளி ஆகும். இது புதிய ஹெச்இ-1

இல் 1 செமீ.க்கும் குறைவாகும். எனவே ஹெட்ஃபோன் கருவியின் சார்ஜ் ரிவெர்சலுக்கு,

மின் திறன் குறைவாக இருப்பதால், குறைந்த மின் சக்தியே போதுமானது. வோல்டேஜ் 5

வோல்ட் மட்டுமே என்பஹால், இசை சமிஞைகள் ஹை வோல்டேஜ் ஆம்பிளிஃபையருக்கு

சரிசம விகிதத்தில் மாற்றப்படுவதுடன், ஹெட்ஃபோனிலும் ஒருங்கிணைக்கப்பட்டு

PRESS RELEASE

3/6

ஆம்பிளிஃபை செய்யப்படும். இது அதிகபட்ச இம்பல்ஸ் ஃபிடிலிடியை குறைந்தபட்ச மின்

தேவைகளுடன் உறுதிப்படுத்துவதும். ட்யூப் ஆம்பிளிஃபையர் ட்யூப்களுடன், எம்ஓஎஸ் –

எஃப்இடி டிரான்சிஸ்டர்ஸுக்கு சதுரமான குணங்களைக் கொண்ட வளைவு இருப்பதால்,

பை போலார் டிரான்சிஸ்டர்களைக் கொண்ட ஆம்பிளிஃபையர்களில் உள்ள கடுமையான

ஒலிச் சிதறல்களைத் தடுக்கப்படும்.

சென்ஹெசர் புதிய ஆம்பிளிஃபையர் கருதுகோளுக்கு ஆடியோ நிபுணர்கள் கூல் கிளாஸ் ஏ

என்று பெயரிட்டுள்ளனர். குறைந்த அலைவரிசை ரகத்தில், கூல் க்ளாஸ் ஏ எந்த

வால்யூமிலும், க்ளாஸ் மின்னாற்றலைத் தரும். அதிக மற்றும் அல்ட்ரா உயர்

அலைவரிசையில், ஆம்பிளைஃபையர் க்ளாஸ் ஏ இல் இருந்து வழக்கமான க்ளாஸ் ஏபி

இயக்கத்திற்குத் மாற்றிக் கொள்ளும். இது இயல்பற்ற அலைவரிசை ஸ்பெக்ட்மில்

கேட்கும் போது மட்டுமே சாத்தியப்படும்.

கோல்ட்-வேபொரைஸ்ட் செராமிக் எலெக்ட்ரோட்ஸ் மற்றும் பிளாட்டினம் வேபொரைஸ்ட்

டயாஃப்ரம்

ஹெட்ஃபோன்கள் முழு ஆற்றலுடன் ஒலியை வழங்க ஹெச்இ1க்குத் தேவையான

பொருள் தேர்வில் நுணுக்கமான கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 6000க்கும் அதிகமான

துணைப் பொருட்கள் தீவிர கவனமுடன் அவற்றின் ஆடியோ குணங்களுக்கு ஏற்பத் தர

மதிப்பீடு செய்யப்பட்டு அதிகபட்ச தீர்வை வழங்க ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

ஹெட்ஃபோன்களில் உள்ள ஆடியோ தாத்திற்குத் துணைப் பொருட்களுக்கு

இடையேயான தொடர்பும், செயலுமே காரணமாகும். உதாரணத்திற்கு ஆடியோ அலகின்

ஈடு இணையற்ற செயல்பாட்டிற்குச், சென்ஹெசர் கோல்ட் வேபொரைஸ்ட் செராமிக்

எலெக்ட்ரோட்களையும், பிளாட்டினம் வேபொரைஸ்ட் டயாஃப்ரமையும்

பயன்படுத்துகிறது.

கம்பி வடங்களும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன என்று சொல்லித் தெரிய

வேண்டியதில்லை. உயர் செயல்பாட்டிற்கு உத்தரவாதம் தரும் எட்டு கம்பி வடங்கள்

பிராணவாயு கலப்பில்லாத செம்பு உலோகத்தாலும், வெள்ளிப் பூச்சாலும்,

உருவாக்கப்பட்டுள்ளதால், ஆடியோ சமிஞைப் பரிமாற்றங்கள் துல்லியமாகவும்,

அதிகபட்சத் மின்னோட்டத்துடனும் நடைபெறும். கம்பி வடங்கள் பல்வேறு

கட்டமைக்கப்பட்ட பொருட்களால் உறுதியாக உறையிடப்பட்டுள்ளதால் அவற்றின் மீது

ஒலி அலைகள் சிதறுவது தடுக்கப்படும்.

அல்ட்ரா அகல அலைவரிசை மற்றும் உலகின் மிக குறைந்த ஒலிச் சிதறல்

இதன் வித்யாசமான டிரான்ஸ்ட்யூசர் அமைப்பு

காரணமாக, புதிய ஹெச்இ 1 அலைவரிசைத் திறன் 8

ஹெர்ட்ஸ் தொடங்கி 100 கிலோ ஹெர்ட்ஸ் வரை

விரிவடையும். இந்த அலைவரிசை மனிதனின்

கேட்கும் திறன் எல்லையை விடவும் அதிகமாகும்.

இருப்பினும், இந்த விரிவான அலைவரிசைத் திறன்

ஒலி அனுபவத்தின் மீது எந்த விளைவையும்

ஏற்படுத்தாமல், கேட்கும் திறனுக்கு உட்பட்டு,

ஹெட்ஃபோன் வழங்கும் ஒலியை எந்தத் தடையும், சிதறலும் இல்லாமல் வழங்கும்.

PRESS RELEASE

4/6

1 கிலோ ஹெர்ட்ஸ் மற்றும் 100 டெசிபல் ஒலி அழுத்த நிலையுடன், ஹெட்ஃபோனின்

ஒலிச் சிதறலின் மொத்த அளவு மிகக் குறைந்தபட்சமாக 0.01% மட்டுமே ஆகும். இதன்

காரணமாக ஆடியோ ஒலியை அதிகபட்ச நம்பகத் தன்மையுடன் ஆடியோ உலகின்

வேறெந்தப் பொருளை விடவும் துல்லியமாகத் தரும். எனவே, ஒலியின் தரத்திற்கு, இதற்கு

முன்பு அளவிடப்படாத ஒலி அமைப்புகளின் புதிய பகுதிகளில் சென்ஹெசர் தடம்

பதிக்கிறது. குண்டூசி விழும் சத்தம் கூட கேட்கும் அளவிற்கு இசை துல்லியமாக இருக்கும்.

ஈடு இணையற்ற தொழில்நுட்பம்

அனலாக் மற்றும் டிஜிடல் ஆடியோ மூலம் ஹெச்இ

1 ஐ இயக்கலாம். இதன் சரிசமான

உட்பாடுகளுடன், ஹெட்ஃபோன் அமைப்பில்

சரிசமமற்ற உட்பாடு சாக்கெட்களும் உண்டு.

உள்ளே வரும் சமிஞைகள், மேலும்

செய்முறைகளுக்கு உட்படுத்தப்படுவதற்கு

முன்பாகவே சரிசமமாக்கப்படும். டிஜிடல் ஆடியோ

ஆதாரங்கள் எஸ்/பிடிஐஎஃப் (ஆப்டிகல் & கோஆக்ஸியல்) அல்லது யூஎஸ்பி மூலம்

இணைக்கப்படும். டிஜிடல் இசைத் தரவுகளை அனலாக் சமிஞைகளாக மாற்றுவதற்கு

ஹெச்இ 1 இஎஸ்எஸ் எஸ்ஏபிஆர்இ இஎஸ்9018 சிப் கன்வர்டர்களைப் பயனப்டுத்தும்.

ஹெச்இ 1இல் ஆடியோ தரவுகளை மாற்ற, அதன் 8 உட்புற டிஏசிக்கள் 32 பிட்

ரெசொல்யூஷன் மற்றும் 384 கிலோ ஹெர்ட்ஸ் அல்லது 2.8 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 5.6

மெகா ஹெர்ட்ஸ் கொண்ட டிஎஸ்டி சமிஞைகளை சரிசமமான அனலாக் சமிஞைகளாக

உதவும். ஒவ்வொரு ஸ்டீரியோ சேனலுக்கும், 4 டிஏசிக்கள் ஒலியைக் குறைக்க

இணையாகப் பொருத்தப்படும். இதன் மூலம் ஹைட் எண்ட் ஆடியோ ஆதாரங்களின்

முழுமையான அலைவரிசை ஸ்பெக்ட்ரம் எந்த ஒலிச் சிதறலுமின்றி மீள் உருவாக்கம்

செய்யப்படும். ஹெச்இ1 முழுமையான சம வடிவமைப்பிற்கு இந்த சுழற்சி

அதிகபட்சமாக்கப்படும்.

அனைத்துப் புலன்களுக்கும் ஈடு இணையற்ற ஒலி அனுபவம்

நீங்கள் கேட்டு மகிழ்வதற்கு முன்பாகவே வித்யாசமான ஹெச்இ 1 அனுபவம் தொடங்கும்.

ஆன் / ஆஃப் ஒலிக் கட்டுப்பாடு அழுத்தப்படும் போது, முன்னால் உள்ள கட்டுப்பாடுகள்

மெதுவாக ஆம்பிளிஃபையரிலிருந்து விரிவடையும். வாக்யூம் ட்யூப்கள் தங்கள் க்வார்ட்ஸ்

களாஸ் பல்புகளுடன் அடித்தளத்திலிருந்து அதிகரித்து ஒளிரத் தொடங்கும். நிறைவாக,

க்ளாஸ் உறை தானியாகவே உயர்ந்து, ஹெட்ஃபோன்களை அகற்ற உதவும். இதன்

முக்கிய நோக்கம் அதிகபட்சத் தரமான பொருட்களுடன் உணர்வுப்பூர்வமான ஒலி

அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதே ஆகும்.

ஆம்ப்ளிஃபையர் கூட்டிற்கு சென்ஹெசர் தேர்ந்தெடுத்த பளிங்கு, பிரபல சிற்பி மைக்கேல்

ஏஞ்சலோ தனது சிற்பங்களைச் செதுக்கத் தேர்ந்தெடுத்த அதே இத்தாலியின் கேரராவைச்

சேர்ந்ததாகும். இதன் சுழல் சுவிட்சுகள் மற்றும் வால்யூம் கண்ட்ரோல்கள் ஒற்றைத் துண்டு

பித்தளையிலிருந்து வார்க்கப்பட்டு குரோமியம் பூசப்பட்டவை ஆகும். நான்கு

சுவிட்சுகளின் நிலைகள் மைக்ரோபுராசஸரால் கட்டுப்படுத்தப்பட்டு, உயர் ரக

ரிலேக்களால் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு அலகும் ரிமோட் கட்டுப்பாடு மூலம்

இயக்கப்படுவதுடன், தேவைக்கு ஏற்றபடி கேட்பவர்கள் மாற்றிக் கொள்ளவும் இயலும்.

உதாரணத்திற்கு ரிமோட் கண்ட்ரோல் மூலம் இன்புட் சுவிட்சை யூஎஸ்பியில் இருந்து

பேலன்ஸ்ட்க்கு மாற்றினால், அது தொடர்பான பொத்தானும் தானியாகவே சுழலும்.

PRESS RELEASE

5/6

ஈடு இணையற்ற தொழில்நுட்பம், அழகான

வடிவமைப்பு மற்றும் மிக உயர் தரமான பொருட்கள்

ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு ஹெட்ஃபோன்களிலும்

தொடர்கிறது. காதுகளுக்கு இதமளிக்கும்

தோலினாலான பஞ்சு போன்ற மெத்தை அமைப்பு

அதிகபட்ச வசதியை பல மணி நேரங்கள் தொடர்ந்து

வழங்கும். பஞ்சு போன்ற மெத்தை அமைப்பின்

உட்புறம், ஒவ்வாமை இல்லாத, மூச்சு விடத்தக்க நுண்

இழைத் துணியுடன், கூடுதல் ஆடியோ தரத்திற்கு உத்தரவாதம் தருகிறது. இவை

அனைத்தும் கூட்டாக இணைந்து வடிவமைப்பு, வசதி, செயல்பாடு ஆகியவற்றுடன்

வித்யாசமான ஆடியோ அனுபவத்தை அனைவருக்கும் வழங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *