திகார் சிறையில் இருந்து டிடிவி தினகரன் விடுதலை
இரட்டை இலை சின்னத்துக்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டிடிவி தினகர னுக்கு ஜாமீன் கிடைத்ததை அடுத்து நேற்று இரவு டெல்லி திகார் சிறை யில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
சிறையில் இருந்து விடுதலை யாகும் தினகரனை வரவேற்க அதிமுக எம்பி வேணுகோபால், தின கரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், அதிமுக (அம்மா கட்சி) செய்தித் தொடர்பாளர் புகழேந்தி ஆகியோர் நேற்று மாலை 5 மணி முதல் சிறை யின் வாயிலில் காத்திருந்தனர்.
இரவு 9.55 மணிக்கு சிறையில் இருந்து தினகரன் வெளியே வந்தார். அவருக்கு கட்சியினர் வரவேற்பு அளித்து அழைத்துச் சென்றனர்.