கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு: தலைவர்கள் இரங்கல்
கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:
திமுக செயல் தலைவர் ஸ்டாலின்:
கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவுக்கு கலைஞர் சார்பிலும், என் சார்பிலும் அவரது குடும்பத்தினருக்கும், இலக்கிய உலகுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ‘விழுந்தாலும் விதைபோல விழு வார்’ என்று அப்துல் ரகுமான் ஒரு கவிதையில் அண்ணாவைப் பற்றி கூறியிருக்கிறார். இன் றைக்கு அப்துல் ரகுமான் விதை போல் விழுந்திருக்கிறார். அவர் மறைந்தாலும், அவ ரது கவிகள் பாடிக் கொண் டிருக்கும்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர்:
கவிஞர் அப்துல் ரகுமான் தமிழ் இலக்கியத்தின் ஆழத்தையும், அகலத்தையும் உலக அரங்கில் பறைசாற்றியவர். அவரது மறைவு தமிழுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்:
தமிழ் கவிதை உல கில் தனது நுட்பமான, நவீன கவிதைகளால் தனித்தன்மை மிக்கவராக விளங்கியவர் கவிக்கோ. மரபுக் கவிதையில் காலூன்றி, புதுக்கவிதை வானத்தில் சிறகடித்த வானம்பாடி அவர். அவரது மறைவு தமிழுக்கு ஈடுசெய்ய முடியாத மாபெரும் இழப்பாகும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்:
கவிக்கோ என்று போற்றப்பட்ட அப்துல் ரகுமான், தமிழகத்தின் பெரும்பான்மையான அரசியல் தலைவர்களுடன் நெருக்கமாக இருந்தாலும் பதவிக்காகவோ, வேறு சலுகைகளுக்காகவோ தமது கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ளாதவர். இன்னும் சில மாதங்களில் கவிக்கோவுக்கு முத்து விழா எடுக்க இலக்கிய உலகம் ஆயத்தமாகி வந்த நிலையில் அவரது மறைவு கூடுதல் சோகத்தை அளிக்கிறது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:
காலத்தால் அழியாத இலக்கியங்களைப் படைத்த கவிக்கோ என்ற கவிதைப் பறவை விண்ணில் சிறகடித்துப் பறந்துவிட்டது. அவருடைய கருத்துகள், கவிதையால் அவர் காட்டிய பாதை, அவர் வாழ்ந்த வாழ்க்கை தமிழகத்தின் கவிதைத் தலைமுறைக்கு வழிகாட்டிக் கொண்டே இருக்கும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:
தமிழகத்தின் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர், இலக்கியவாதி அப்துல் ரகுமான். கவிக்கோ எனப் போற்றப்படும் இவர், உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களின் அன்பைப் பெற்ற வர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்களுக்கும் தமாகா சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள் கிறேன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன்:
வானம்பாடி இயக்க கவிஞர்களோடு இணைந்து இயங்கிய கவிக்கோ, புதுக்கவிதையின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவர். தன்னுடைய கவிதைகளில் மக்கள் ஒற்றுமை, மதநல்லிணக்கம், ஏகாதிபத்திய எதிர்ப்பு போன்ற வற்றை முன்னிறுத்திய அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பாகும்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநி லச் செயலாளர் இரா.முத்தரசன்:
ஹைக்கூ, கஜல் எனும் பிறமொழி இலக்கிய வடிவங் களை தமிழில் பரப்பியவர் கவிக்கோ அப்துல் ரகுமான். அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு ஈடுசெய்யமுடியாத இழப்பாகும்.
இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, சென்னை ரஹ்மத் அறக்கட்டளை நிறுவனர் எம்.ஏ.முஸ்தபா உள் ளிட்ட பல்வேறு தலைவர் களும் கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.