தாய்லாந்து பேட்மிண்டன் போட்டி: அரைஇறுதியில் சாய்னா
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் பெண்கள் ஒற்றையர் கால்இறுதியில் இந்தியா வீராங்கனை சாய்னா நேவால் ஜப்பான் வீராங்கனை ஹருகோ சுசுகியை சாய்த்து அரைஇறுதியை எட்டினார்.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காங்கில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சாய் பிரனீத், தாய்லாந்து வீரர் கன்டபோன் வாங்ஷரோனை சந்தித்தார்.
51 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சாய் பிரனீத் 21-16, 21-17 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினார். பெண்கள் ஒற்றையர் கால்இறுதியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் 21-15, 20-22, 21-11 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீராங்கனை ஹருகோ சுசுகியை சாய்த்து அரைஇறுதியை எட்டினார்.