தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சோனியா வாழ்த்து கடிதம்: வாசித்து காட்டினார் உதவியாளர்

பிறந்தநாள் மற்றும் சட்டமன்ற வைரவிழா காணும் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தை, உதவியாளர் வாசித்து காட்டினார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நாளை 94-வது பிறந்த தினமாகும். இதையொட்டி அவரது பிறந்தநாளுடன், அவரது சட்டப்பேரவை வைர விழாவையும் சேர்த்து சிறப்பாக கொண்டாட தி.மு.க. தலைமை ஏற்பாடு செய்துள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை (ஜூன் 3–ந் தேதி) மாலை 5 மணிக்கு பிரமாண்ட விழா நடைபெறுகிறது. காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், கேரள முதல்வர் பிரனாயி விஜயன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி அமீதுஅன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

மகிழ்ச்சியுடன் கூடிய நீண்ட ஆயுளை ஆண்டவன் அருளட்டும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், வைர விழா காணும் திமுக தலைவர் கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் மூலம் வாழ்த்து. அவரது வாழ்த்து கடிதத்தை தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் அவரது உதவியாளர் வாசித்து காட்டினார். அதனை ஆர்வத்துடன கருணாநிதி கேட்டார்.

உடல் நலக் குறைவு காரணமாக கருணாநிதி வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருவதால், நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக தொண்டர்கள் யாரும் வர வேண்டாம் என்று தி.மு.க. தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது. வாழ்த்து தெரிவிக்க இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *