‘சங்கமித்ரா’ படத்தில் சுருதிஹாசனுக்கு பதில் ஹன்சிகா?
சுந்தர்.சி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரிக்க இருக்கும் படம் ‘சங்கமித்ரா’. இப்படத்தின் இளவரசியாக நடிக்கவிருந்த சுருதிஹாசனுக்கு பதில் ஹன்சிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுந்தர்.சி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரிக்க இருக்கும் படம் ‘சங்கமித்ரா’. இதில், ஜெயம் ரவி, ஆர்யா நாயகர்களாகவும் சுருதிஹாசன் நாயகியாகவும் நடிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இளவரசியாக நடிக்க இருந்த சுருதிஹாசன் லண்டனில் வாள் பயிற்சி பெற்றார்.
ஆனால், கதையின் முழு விவரத்தை தெரிவிக்கவில்லை. கால்ஷீட் தேதியை முடிவு செய்யவில்லை என்று கூறி இந்த படத்தில் இருந்து சுருதிஹாசன் விலகி விட்டார். இப்போது இந்த வேடத்தில் ஹன்சிகா நடிப்பார் என்று கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், ஹன்சிகாவுடன் பேச்சு வார்த்தை நடப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே ‘சங்கமித்ரா’ படத்தின் இளவரசியாக ஹன்சிகா நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.