நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி நடித்து இயக்கி வெளியாகியுள்ள ‘தொண்டன்’ திரைப்படம் தொடர்பான ரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி கரூரில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக வந்த சமுத்திரக்கனி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி தமிழக மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தமிழகத்தை தமிழர்தான் ஆள வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா கூறியது அவரது சொந்தக் கருத்து.

ஜிஎஸ்டி வரி குறித்த நடிகர் கமல்ஹாசனின் கருத்து வரவேற்கத்தக்கது. மே 17 இயக்கம் திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பது வருத்தமளிக்கிறது என்றார்.