திரைப்பட நடிகர் சாமிக்கண்ணு காலமானார்

‘ஜானி,’ ‘முள்ளும் மலரும்’, ‘போக்கிரிராஜா’ உட்பட 400 படங்களுக்கு மேல் நடித்துள்ள, நடிகர் சாமிக்கண்ணு உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 95.

8 வயதில் இருந்து நாடகங்களில் நடித்து வந்த சாமிக்கண்ணு 1954-ல் ‘புதுயுகம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், எஸ்பி.முத்துராமன், இராம நாராயணன் உட்பட ஏராளமான இயக்குநர்களின் படங்களில் நடித்துள்ளவர்,

இயக்குநர் மகேந்திரனின் படங்களில் குறிப்பிட்டுப் பேசக்கூடிய கதாபாத்திரங்களில் நடித்தவர். ’சகலகலா வல்லவன்’. ‘வண்டிசக்கரம்’, ‘உதிரிப்பூக்கள்’. ‘என் ராசாவின் மனசிலே’ போன்ற படங்கள் உட்பட 400 படங்களுக்கு மேல் நடித்துள்ள சாமிக்கண்ணு, சென்னை பள்ளிக்கரணையில் வசித்து வந்தார். இவருக்கு 2 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். அவரது உடல் அடக்கம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *