விருதுகள் வழங்கப்படுவது எப்படி?- அரவிந்த்சாமி விளாசல்
யார் விருது விழாவுக்கு செல்கிறார்களோ அவர்களே விருதைப் பெற வேண்டியதாக உள்ளது என்று அரவிந்த் சாமி காட்டமாக விமர்சித்துள்ளார்.
தமிழக நிலவரம், அரசியல் சூழல், நடப்புப் பிரச்சினைகள் குறித்து அவ்வப்போது ட்விட்டரில் தன் கருத்தை தெரிவித்து வருகிறார் நடிகர் அரவிந்த் சாமி.
தற்போது விருதுகள் குறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், ”சில விருதுகள் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுவதில்லை. யார் விருது விழாவுக்கு செல்கிறார்களோ அவர்களே விருதைப் பெற வேண்டியதாக உள்ளது. இதனால் விருதுக்கு என் பெயர் பரிந்துரைக்கப்பட்டாலும், நான் வாக்குகளுக்காக என் நேரத்தை செலவழிக்க விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
எந்த விருது வழங்கும் விழாவுக்காக இப்படி ட்வீட் செய்துள்ளார் என்பது குறித்து அரவிந்த்சாமி குறிப்பிடவில்லை.