எனக்கும் கும்ப்ளேவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை – விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுக்கும் இடையே பிரச்சனை நிலவுகிறது என தகவல்கள் வெளியான நிலையில், விராட் கோலி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுக்கும் இடையே பிரச்சனை நிலவுகிறது என தகவல்கள் வெளியான நிலையில், விராட் கோலி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் அனில் கும்ப்ளே. இவருக்கும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் இடையே மோதல் இருப்பதாக கூறப்படுகிறது. அனில் கும்ப்ளே மைதானத்திற்குள்ளும், வீரர்களின் அறைக்குள்ளும் ஹெட்மாஸ்டர் போன்று செயல்படுகிறார் என வீரர்கள் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது.
அதனையடுத்து, நேற்று நடைபெற்ற பயிற்சியிலும் விராட்கோலி ஈடுபடவில்லை. இந்நிலையில், இந்த குற்றச்சாட்டை அவர் இன்று
மறுத்துள்ளார். இங்கிலாந்தில் செய்தியாளர்களை சந்தித்த விராட் கோலி, தனக்கும் கும்ப்ளேவுக்கும் எந்த பிரட்சனையையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
யூகங்களின் அடிப்படையில் இந்த பிரச்சனை கிளப்பப்பட்டுள்ளது. இது போல கடந்த முறையும் நடைபெற்றது எனவும் விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்திய அணி நாளை பாகிஸ்தானை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *