2022ம் ஆண்டுக்குள் 2400 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட ஹெரிட்டேஜ் நிறுவனம் முடிவு

சென்னை, ஜூன் 2017: வெள்ளிவிழா ஆண்டை கொண்டாடும் இந்தியாவின்

முன்னணி பால் பண்ணை நிறுவனமாகிய ஹெரிட்டேஜ் நிறுவனம், வரும்

2022ம் ஆண்டுக்குள் ரூபாய் 6000 கோடி வருவாய் ஈட்ட முடிவு செய்துள்ளது.

பால் வணிகத்தில் முன்னணியில் உள்ள ஹெரிட்டேஜ் நிறுவனம், தற்போது

24% சதவீத அளவில் உள்ள மதிப்பு கூட்டு பொருட்களை 40% சதவீதம்

உயர்த்துவதின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் தங்களுடைய வருவாயை

ரூபாய் 2400 கோடி அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் உள்ள பானச்சந்தை பல்வேறு தயாரிப்புகளுடன் ஏராளமான

கூற்றுகளை கொண்டுள்ளது. சில பானங்கள் புத்துணர்ச்சி தருபவையாகவும்,

சில பானங்கள் ஆரோக்கியம் தருபவையாகவும், சில பானங்கள்

பாரம்பரியமானவையாக உள்ளன. அவ்வாறு புத்துணர்ச்சி தரும் மற்றும்

சுவையான ஹெரிட்டேஜ் பால் தற்போது பெட் பாட்டில்களில்

கிடைக்கப்பெறுகிறது. பாரம்பரிய சுவையுடனான ஹெரிட்டேஜ் நிறுவனத்தின்

பால் சுகாதாரம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றை பிரதானமாக கொண்டு

செயல்படுகிறது.

சமீபத்தில் இந்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி சீர்திருத்தத்தில் நறுமண

சுவையுடைய பாலுக்கு 5% வரி விதிக்கப்பட்டுள்ளதின் மூலம், பால்

தயாரிப்பு துறையில் புதிய அத்தியாயத்தை துவங்கியுள்ளது. இத்தகைய

சாதகமான முடிவு பால் பொருட்களின் நுகர்வு மட்டுமின்றி கிராமப்புற

செழிப்புக்கும் வழிவகை செய்யும்.

ஹெரிட்டேஜ் நிறுவனம் மேற்கு பிராந்தியத்தில் பூனே மற்றும் மும்பையிலும்,

வடக்கு பிராந்தியத்தில் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் தங்களுடைய

இருப்பை கொண்டுள்ளது. கனிம விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக சமீபத்தில்

ஹெரிட்டேஜ் நிறுவனம், ரிலையன்ஸ் பால் பண்னையை

கையகப்படுத்தியதன் மூலம் இந்தியா முழுமைக்குமான நிறுவனமாக

மேம்பட்டுள்ளது.

ஹெரிட்டேஜ் நிறுவனத்தின் இத்தகைய வளர்ச்சிக்கு, தரத்தில் அவர்களின்

சமரசமற்ற தன்மையே காரணம். சுமார் 9000 கிராமங்களில் ஹெரிட்டேஜ் பால்

கொள்முதல் செய்து வருகிறது. பால் கொள்முதலை அருகாமையில் உள்ள

சந்தையில் கொண்டுள்ளதின் மூலம் நுகர்வோர்க்கு பாலின் தரம் குறையாமல்

வழங்குகிறது. தற்போது 15 இடங்களில் ஐஎஸ்ஓ 22000 தரத்துடன் கூடிய பால்

உற்பத்தி மையங்களை ஹெரிட்டேஜ் நிறுவனம் கொண்டுள்ளது.

திருமதி பிராமனி நாரா, நிர்வாக இயக்குநர், ஹெரிட்டேஜ் ஃபுட்ஸ் லிமிடெட்

கூறும்போது, நமது நாட்டில் அதிகரித்து வரும் மதிப்புமிக்க பொருட்கள்

சந்தையில் பயணம் புரிவதில் நாங்கள் பெறுமகிழ்ச்சி கொள்கிறோம்.

புதுமையான தயாரிப்புகளுக்கான எங்கள் சிந்தனை செயல்முறை மிக

எளிதானது. ஒரு இரண்டு வயது குழந்தையின் தாயாக, ஒவ்வொரு நாளும் என்

குழந்தைக்கு ஊட்டசத்து உள்ள உணவை வழங்குவதில் மிகுந்த சவால்கள்

உள்ளன. இதன் பொருட்டு ருசி மற்றும் சத்து உடைய உணவுகளை ஒரே

நேரத்தில் வழங்கும் முக்கிய சவாலை எங்களுடைய தயாரிப்புக் குழுவிற்க்கு

அளித்துள்ளோம் என்று கூறினார்.

ஹெரிட்டேஜ் ஃபுட்ஸ் லிமிடெட் – ஒரு சிறுகுறிப்பு :

1992 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட த ஹெரிடேஜ் குரூப், இந்தியாவில் வேகமாக

வளர்ந்து வரும் பொது பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாகும்.

ஹெரிட்டேஜ் நிறுவனத்தின் 2017ம் நிதியாண்டு ஆண்டு வருவாய் ரூபாய்

2640 கோடியை கடந்துள்ளது.

இந்தியாவில் 15 மாநிலங்களில் ஹெரிட்டேஜ் நிறுவனம் பிரதானமாக பால்

கொள்முதல், பதப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்து வருகிறது.

பழச்சாறுகள் புதிய பால், தயிர், வெண்ணெய் பால், லேசி, ஐஸ் கிரீம், உறைந்த

இனிப்பு, பன்னீர், வெண்ணெய், நெய், பால் பால் பவுடர், பால் இனிப்புகள் ஆகிய

அனைத்து வகையான பால் தயாரிப்புகளை ஹெரிட்டேஜ் நிறுவனம்

தயாரிக்கிறது. ஹெரிட்டேஜ் நிறுவனம் கால்நடை தீவன வணிகத்திலும்

ஈடுபட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *