உயிரிழந்த 14 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம்: எடப்பாடி உத்தரவு

பல்வேறு நிகழ்ச்சிகளில் உயிரிழந்த 7 பேர் மற்றும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 7 பேர் உள்பட 14 பேர் குடும்பத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நீலகிரி மாவட்டம், நடுவட்டம் காவல் நிலையத்தில், சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ஆர்.சுதேவன்;
சேலம் மாநகரம், கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில், தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த எம்.மசூத்கான்;
கடலூர் மாவட்டம், ஆயுதப்படை, வாகனப்பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வந்த ஆர்.தமிழ்செல்வம்;
சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை- 1. எ–-நிறுமம், 43ம் அணியில் காவலராகப் பணிபுரிந்து வந்த எம்.சீதா; ஆயுதப்படை- 1. ஆ–-நிறுமம், 12ம் அணியில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சுப்ரமணியன்;
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி காவல் நிலையத்தில், சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பி.சுந்தர்;
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகர் காவல் நிலையத்தில், காவலராகப் பணிபுரிந்து வந்த ஜி. ராஜராஜன்;
——–ஆகிய காவலர்கள் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;
மின்சாரம் தாக்கி 7 பேர் மரணம்
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் வட்டம், மரகதபுரம் கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவரின் மகன் வேலாயுதம் மற்றும் வில்வமணி என்பவரின் மகன் மகாதேவன்;
நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், உல்லத்தி கிராமத்தைச் சேர்ந்த ராமன் என்பவரின் மகன் ஆர். ராஜேந்திரன்;
திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், சூரக்குடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆர். ராஜுநாயுடு என்பவரின் மகன் வெங்கடாசலம்;
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஆதனக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்து என்பவரின் மகன் வீரையன்;
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், சின்னதண்டரகுண்டா கிராமத்தைச் சேர்ந்த கோடியப்பா என்பவரின் மகன் வெங்கடேஷ்;
வேலூர் மாவட்டம், வாலாஜா வட்டம், மருதாலம் மதுரா தானியூர் கிராமத்தைச் சேர்ந்த சேட்டு என்பவரின் மகன் சுரேஷ்; ——–ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
மேற்கண்ட பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 14 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *