தமிழக அரசியலில் குழப்பம் நிலவி வருகிறது: வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்- காங்கிரஸாருக்கு ராகுல் அறிவுரை

‘தமிழக அரசியலில் குழப்பம் நிலவி வருகிறது. இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு ஏழை மக்களை சந்தியுங் கள்’ என கட்சி நிர்வாகிகளுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அறிவுரை வழங்கினார்.

இரண்டு நாள் பயணமாக சென்னை வந்திருந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, நேற்று பகல் 12.40 மணிக்கு கட்சித் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். அவருக்கு காங்கிரஸ் சேவா தளம் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதன்பின், கட்சிக் கொடியை ஏற்றி வைத்த ராகுல், மரக்கன்றுகளையும் நட்டார். காமராஜர், சத்தியமூர்த்தி ஆகியோர் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து, மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற் றார். இதில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் முகுல் வாஸ்னிக், தமிழக பொறுப்பாளர் சென்னா ரெட்டி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன், தங்கபாலு, சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி மற்றும் எம்.பி, எம்எல்ஏக்கள், மாவட்டத் தலைவர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் முதலில் பேசிய கே.ஆர்.ராமசாமி, ‘‘அடுத்தமுறை நீங்கள் (ராகுல்) தமிழகம் வரும்போது, அதிகாரமுடையவ ராக வரவேண்டும். நீங்கள் சொல் வதை செய்ய நாங்கள் தயாராக உள்ளோம்’’ என்றார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசும்போது, ‘‘காங்கிரஸ் கட்சியில் பிரச்சினை களை மறந்து ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என உறுதி கூறுகி றோம். எங்களுக்கு ஒரு கனவு உண்டு. நீங்கள் (ராகுல்) மத்தியில் பாஜக அரசை நீக்கிவிட்டு பிரதம ராக வேண்டும். அதேபோல தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை மீண்டும் நிறுவ வேண்டும்’’ என்றார்.

பின்னர் ராகுல் காந்தி பேசிய தாவது:

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக அல்லது அதிமுகதான். தற்போது நான் அறிந்தவரை தமிழகத்தில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. இளைய தலை முறையினரால் எதிர்காலத்தில் என்ன நடக்க இருக்கிறது என்பதை தெளிவாக தெரிந்துகொள்ள முடியவில்லை. இதுதான் காங் கிரஸ் கட்சிக்கு நல்ல வாய்ப்பு. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அறுவடை செய்ய வேண்டும்.

நாம் இங்கு குடும்பமாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்தக் குடும்பத்தில் உள்ள மூத்த உறுப்பினர்கள், பத்திரிகை யாளர்களிடம்தான் அதிக அளவில் பேசுகின்றனர். குடும்பத்தில் பேசுவதில்லை. மூத்த தலைவர்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே முக்கியம். ஏழை எளிய மக்களைத் தொடர்புகொள்ள வேண்டும். அவர்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ‘சில காலம் காத்திருங் கள். நாங்கள் தயாராகி வருகிறோம்’ என அவர்களிடம் சொல்லுங்கள்.

காங்கிரஸ் நிர்வாகிகள் உங்கள் பகுதிக்கு செல்லுங்கள், உங்களுடன் வர நானும் தயாராக இருக்கிறேன். இங்குள்ளவர்கள் என்னை 100 சதவீதம் நம்பலாம். கட்சியை முழுமையாக பலப் படுத்துவேன். எந்த நேரத்திலும் என்னை நீங்கள் சந்திக்கலாம். நீங்கள் திமுக, அதிமுக, பாமக என்ன செய்கிறது என்பதை எண்ணி கவலைப்பட வேண்டாம். நாம் என்ன செய்ய வேண்டும் என்ப தற்காக மட்டும் கவலைப்படுங்கள்.

இவ்வாறு ராகுல் பேசினார்.

6 ஆண்டுகளுக்குப் பிறகு

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்க, தமிழகம் வந்தார். அப்போது சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். தற்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று வந்தார். அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், கட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்திரா காந்தி நூலகத்தையும் ராகுல் திறந்துவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *