தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் திருவண்ணாமலை மாவட்ட ராணுவ வீரர் மரணம்: சொந்த கிராமம் சோகத்தில் மூழ்கியது

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மணிவண்ணன்(24) வீரமரணம் அடைந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த தேப்பனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கோபால். இவரது மனைவி சின்னபொண்ணு. இவர்களது மூத்த மகன் மணிவண்ணன். இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்தார். பணியில் இருந்துகொண்டே இளங்கலை பட்டம் பெற்றார்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மணிவண் ணன் வீர மரணமடைந்தார். தகவ லறிந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர். மேலும், தேப்பனந்தல் கிராமம் சோகத்தில் மூழ்கியது.

அவரது உடல், சொந்த கிராமத் துக்கு இன்று கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிராம மக்களின் அஞ்சலிக்கு பிறகு, அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்படும். அதன்பிறகு ராணுவ மரியாதை யுடன் மணிவண்ணணின் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெறும்.

விரைவில் திருமணம்

கிராம மக்கள் கூறும்போது, “மணிவண்ணணுக்கு ஆனந்த் என்ற தம்பியும், மஞ்சுளா என்ற தங்கையும் உள்ளனர். மஞ்சுளாவுக்கு திரு மணமாகிவிட்டது. மணிவண்ண ணுக்கு உறவினர் பெண்ணை திருமணம் செய்து வைக்க, அவரது பெற்றோர் முடிவு செய்திருந்தனர். கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்புதான் அவர் பெற்றோருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது இன்னும் இரண்டொரு நாட்களில் விடுமுறையில் சொந்த ஊர் வருவதாகத் தெரிவித்திருந் தாராம். ஓரிரு வாரத்தில் அவ ருக்கு திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்துவிட்டார் என்ற அதிர்ச்சி தகவல் எங்களை வேதனைக்கு ஆளாக்கியுள்ளது. இதனால் கிராமமே சோகத்தில் மூழ்கி யுள்ளது” என்றனர்.

ரூ.20 லட்சம் நிதி

இதற்கிடையே தீவிரவாத தாக்குதலில் இறந்த தமிழக வீரர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார். மணிவண்ணன் உயிரிழந்த தகவலறிந்து நான் மிகுந்த துயரமடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், மணிவண்ணன் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் உடனடியாக வழங்கப் படும் என்று நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல்வர் கூறியுள் ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *