ஜிப்மர் மருத்துவக் கல்லூரி எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வில் 200 இடங்களுக்கு 1.49 லட்சம் பேர் போட்டி

புதுச்சேரியில் மத்திய அரசுக்கு சொந்தமான ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்களும், காரைக்காலில் உள்ள ஜிப்மர் கிளை கல்லூரியில் 50 இடங்களும் உள்ளன. இந்த 200 இடங்களுக்கும் அகில இந்திய அளவில் தனியாக நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இதற்கான நுழைவுத் தேர்வு நேற்று டெல்லி, சென்னை, திரு வனந்தபுரம், ஐதராபாத், புதுச்சேரி உள்ளிட்ட 75 நகரங்களில் 339 மையங்களில் நடைபெற்றன.

தேர்வு எழுதுவதற்கு மொத்த மாக 1 லட்சத்து 89 ஆயிரத்து 663 பேர் விண்ணப்பித்து இருந்தனர். காலை, மாலை என இரு பிரிவு களாக தேர்வு நடைபெற்றது. காலை பிரிவில் 83 ஆயிரத்து 720 பேர் தேர்வு எழுத அழைக்கப்பட்டு இருந்தனர். இதில் 67,182 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். மாலை பிரிவில் தேர்வு எழுத 1 லட்சத்து 5 ஆயிரத்து 943 பேர் அழைக்கப்பட்டனர். இதில் 82,187 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

புதுச்சேரியில் மணக்குள விநா யகர் பொறியியல் கல்லூரி, மணக் குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஆச்சாரியா பொறியியல் கல்லூரி, ஆல்பா பொறியியல் கல்லூரி, கிறிஸ்ட் பொறியியல் கல்லூரி, பிரிஸ்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 6 மையங்களில் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு மையங் களில் ஜிப்மர் இயக்குநர் பரிஜா, முதல்வர் சுவாமிநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர். தமிழ்நாட்டில் 19 மையங்களில் தேர்வு நடைபெற் றது.

தேர்வில் ஆள்மாறாட்டத்தைத் தடுக்க பயோமெட்ரிக் வருகைப் பதிவு , புகைப்படம் எடுக்கப்பட்டன. ஆதார் அட்டை உள்ளிட்ட அடை யாள அட்டைகளும் பரிசோத னைக்கு எடுத்துக் கொள்ளப்பட் டன. பயோமெட்ரிக் முறையில் பரிசோதனை செய்த பிறகே மாண வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அனைத்து மையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

இத்தேர்வு முடிவுகள் வரும் 19-ம் தேதிக்குள் வெளியாகும் என்று ஜிப்மர் நிர்வாகம் தெரிவித் துள்ளது. இதைத் தொடர்ந்து வரும் 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை முதற்கட்ட கலந் தாய்வு நடைபெறுகிறது. ஜூலை 19-ம் தேதி இரண்டாம் கட்டக் கலந்தாய்வும், ஆகஸ்ட் 23-ம் தேதி மூன்றாம் கட்டக் கலந்தாய்வும் நடைபெறுகிறது.

ஜூலை 3-ம் தேதி ஜிப்மர் காரைக் காலிலும், 4-ம் தேதி ஜிப்மர் புதுச் சேரியிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும். ஜூலை 5-ம் தேதி அடிப்படை பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது. செப்டம்பர் 30-ம் தேதி எம்பிபிஎஸ் சேர்க்கை நடைமுறை முடிவடைகிறது.

ஜிப்மர் தரப்பில் கூறியதாவது:

ஜிப்மரில் உள்ள 150 இடங்களில் 40 இடங்கள் புதுச்சேரி மாநிலத்துக்கு ஒதுக்கப்படும். மற்றவை அகில இந்திய ஒதுக்கீடு ஆகும். காரைக்கால் ஜிப்மரில் உள்ள 50 இடங்களில் புதுச்சேரி மாநிலத்துக்கு 14 இடங்களும், மற்றவை அகில இந்திய ஒதுக்கீடாகவும் இருக் கும். மொத்தம் 54 இடங்கள் புதுச்சேரிக்கு ஒதுக்கப்படும் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *