ஆசிரியர் கலந்தாய்வில் முறைகேடு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
ஆசிரியர் கலந்தாய்வில் முறை கேடு ஏதும் நடக்கவில்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதி யாகத் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பள்ளி பாடத் திட்டத்தை மாற்றி அமைக்க, இரு நாட்களில் உயர்மட்ட குழு அமைக்கப்படும். இந்த குழுவில் கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், வழக்கறிஞர்கள் இடம்பெறுவார் கள்.
ஆசிரியர் கலந்தாய்வில் எங் கும் முறைகேடு நடைபெற வில்லை. இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தவர், எங்கு முறை கேடு நடந்தது என்பதை தெரி வித்தால், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரத்தில் எங்கும் தவறு நடைபெறவில்லை என்றால், சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிமுக இரு அணிகள் இணைவது குறித்தும், தினகரன் கட்சிப் பணியாற்றுவது குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிப்பார்.
சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மாவட்டம்தோறும் பயிற்சி மையங் கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் கூடுதல் மாண வர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.