தரங்காவுக்கு 2 ஆட்டத்தில் தடை

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொட ரில் நேற்று முன்தினம் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த ஆட்டத்தில் இலங்கை அணியின் தற்காலிக கேப்டனாக செயல் பட்ட உபுல் தரங்காவுக்கு 2 ஆட்டங் களில் விளையாட தடை விதிக் கப்பட்டுள்ளது.

இந்த ஆட்டத்தில் இலங்கை வீரர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் 50 ஓவர்கள் வீசி முடிக்கவில்லை. நிர்ண யிக்கப்பட்ட காலத்துக்குள் 4 ஓவர் களை குறைவாக வீசியிருந்தனர். இதனால் ஐசிசி விதிகளின்படி, மேட்ச் ரெப்ரி டேவிட் பூன் தற்காலிக கேப்டனாக செயல்பட்ட உபுல் தரங்காவுக்கு 2 ஆட்டங் களில் விளையாட தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும் அணியில் உள்ள வீரர் களுக்கு ஆட்டத்தின் சம்பளத் தொகையில் 60 சதவீதம் அப ராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தரங்காவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் இலங்கை அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *