உத்தரப் பிரதேசத்தில் பேருந்து – லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 17 பேர் பலி
டெல்லியில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் கோன்டா நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து – லாரி மீது மோதி விபத்திற்குள்ளானதில் 17 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோன்டா மாவட்டத்திற்கு பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. உத்திரப்பிரதேச மாநில தேசிய நெடுஞ்சாலையில் பரேலி அருகே நள்ளிரவு 1 மணியளவில் சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த லாரியுடன் மோதி விபத்திற்குள்ளனாதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது.
மோதிய உடனே பேருந்தும், லாரியும் தீப்பிடித்து எரிய துவங்கியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் அருகாமையிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு மேலும் அதிரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.
விபத்தினை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த உத்தரப் பிரதேச போலீசார், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்புப் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த விபத்தால் உத்தரப் பிரதேசம் – டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.