ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படை முகாம் மீது தாக்குதல் நடத்திய 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படை முகாம் மீது தாக்குதல் நடத்திய 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள சம்பல் பகுதியில் உள்ள பாதுகாப்புப் படை முகாம் மீது தாக்குதல் நடத்திய தீவிராதிகள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காலை சுமார் 4.10 மணிக்கு இந்திய எல்லைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த தீவிரவாதிகள் 4 பேர் சம்பல் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்புப் படையின் 45 படைப்பிரிவு முகாம் மீது தாக்குதல் நடத்தினர். திடீரென நடத்தப்பட்ட இந்த தாக்குதலையடுத்து, இந்திய தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்நிலையில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்த முயற்சி செய்த தீவிரவாதிகளை பாதுகாப்படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
இதில் தீவிரவாதிகள் 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து அதிகளவில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.