சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா – வங்காளதேசம் இன்று மோதல்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் லண்டனில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் ஆட்டத்தில் ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலியாவும், மோர்தசா தலைமையிலான வங்காளதேசமும் (ஏ பிரிவு) மோதுகின்றன.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் லண்டனில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் ஆட்டத்தில் ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலியாவும், மோர்தசா தலைமையிலான வங்காளதேசமும் (ஏ பிரிவு) மோதுகின்றன. ஆஸ்திரேலிய அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடி அதில் மழையால் தோல்வியில் இருந்து தப்பித்து தலா ஒரு புள்ளியை பகிர்ந்து கொண்டது. வங்காளதேச அணி தனது தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக தமிம் இக்பாலின் சதத்தின் துணையுடன் 305 ரன்கள் குவித்த போதிலும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.
இன்றைய ஆட்டம் இவ்விரு அணிகளுக்கும் வாழ்வா-சாவாகும். இதில் தோற்றால் ஏறக்குறைய வெளியேற வேண்டியது தான். அதனால் இரு அணி வீரர்களும் முழுமூச்சுடன் வரிந்து கட்டி நிற்பார்கள். இவ்விரு அணிகளும் இதுவரை 19 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில் 18-ல் ஆஸ்திரேலியாவும், ஒன்றில் வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணியிலும் ஒரு சில மாற்றங்கள் இருக்கும். இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *