பாரதிராஜா ஒரு குரங்கு: வித்தியாசமாய் பாராட்டிய பார்த்திபன்

பாரதிராஜாவை குரங்கு என நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் வித்தியாசமாக பாராட்டி உள்ளார்.
நித்திலன் இயக்கத்தில் பாரதிராஜா, விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் குரங்கு பொம்மை. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இப்படத்தை ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்.எல்.பி. நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இயக்குநர் இமயம் பாரதிராஜா, நடிகர் எஸ்.வி.சேகர், மனோபாலா, பார்த்திபன், இயக்குநர் தரணி, சிபிராஜ், விதார்த், தயாரிப்பாளர், நடிகர் பி.எல்.தேனப்பன், ஞானவேல்ராஜா, மைம்கோபி, டான்ஸ் மாஸ்டர் ராதிகா, ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்.எல்.பி. நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
குரங்கு பொம்மை, பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய, பார்த்திபன் தன் குருவின் குருவை வித்தியாசமாக பாராட்டினார்.
விழாவில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் பேசுகையில், இயக்குநர் இமயம், பாரதிராஜா அவர்களை பாராட்டுவதற்கு வாழ்நாள் போதாது. தமிழ் சினிமா ஒட்டுமொத்தமாக பாரதிராஜா அவர்களுக்கு ஒரு பெரிய பாராட்டுவிழா எடுக்க வேண்டும். இந்த படத்தின் தலைப்பு ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது. எனவே இயக்குநர் இமயம் அவர்களை வித்தியாசமாக பாராட்ட ஆசைப்படுகிறேன்.
பாரதிராஜா நல்ல இயக்குநர் என்று எல்லாரும் சொல்வார்கள். பாரதிராஜா சிறந்த மனிதர் என்றும் சொல்வார்கள். ஆனால், என்னை பொறுத்தவரையில், பாரதிராஜா ஒரு சிறந்த “குரங்கு”. குரங்கு நான்கு எழுத்து.
கு – நல்ல குணவான்
ர – சிறந்த ரசனையாளர்
ங் – இங்கிதம் தெரிந்தவர்
கு – குவாலிட்டியானவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *