ஜிஎஸ்எல்வி மார்க்-3 திட்டத்தில் முக்கிய பங்காற்றிய விஞ்ஞானிகள்

ஜிஎஸ்எல்வி மார்க்-3 திட்ட இயக்குநராக பணியாற்றியவர் இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானியான ஜி.அய்யப்பன். எல்விஎம்-3-எக்ஸ் திட்ட இயக்குநர், ஜிஎஸ்எல்வி மார்க்-3 இணை இயக்குநர் உள்பட இஸ்ரோவில் பல்வேறு முக் கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

திருவனந்தபுரம் பொறியியல் கல் லூரியில் பிஇ பட்டமும், சென்னை ஐஐடியில் எம்இ பட்டமும் பெற்ற இவர், 1982-ல் இஸ்ரோ பணியில் சேர்ந்தார்.

ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட ஜிசாட்-19 செயற் கைக்கோளின் திட்ட இயக்குநராக பணியாற்றியவர் தபன் மிஸ்ரா. இவர் தற்போது அகமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மையத்தின் இயக்குநராக இருந்து வருகிறார். இவர்களுடன் திருநெல் வேலி மாவட்டம் மகேந்திரிகிரியில் உள்ள திரவ உந்து எரிபொருள் திட்ட மையத்தின் இயக்குநர் எஸ்.சோமநாத், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம்சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தின் இயக்குநர் கே.சிவன் உள்ளிட்ட இஸ்ரோ மூத்த விஞ்ஞானிகளும் ஜிஎஸ்எல்வி மார்க்-3 திட்டத்தில் முக்கிய பங்காற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *