கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் சயான் கைது: முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர்
கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என கருதப்படும் சயான் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடித்து வந்த சயானை கோத்தகிரி போலீசார் கைது செய்துள்ளனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் காவலாளி கடந்த ஏப்ரல் மாதம் கொலை செய்யப்பட்ட வழக்கில் சயான் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட சயான் கோத்தகிரி நீதிமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஆஜர்படுத்தப்படுகிறார்.
ஏப்ரல் 29-ம் தேதி கேரள மாநிலம் பாலக்காடு அருகே விபத்தில் சிக்கி சயான் படுகாயம் அடைந்தார். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சயானை போலீசார் கைது செய்துள்ளனர்.