தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் 24 குண்டுகள் முழங்க அடக்கம்

தீவிரவாதிகள் நடத்திய தாக்குத லில் வீர மரணமடைந்த திருவண் ணாமலை மாவட்ட ராணுவ வீரர் மணிவண்ணனின் உடல் 24 குண்டு கள் முழங்க நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த கேளூர் ஊராட்சி தேப்பனந்தல் கிராமத் தைச் சேர்ந்தவர் விவசாயி கோபால். இவரது மூத்த மகன் மணிவண் ணன்(24). இவர், கடந்த 4 ஆண்டு களாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் கடந்த 3-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், மணிவண் ணன் உட்பட 2 பேர் வீர மரண மடைந்தனர். மணிவண்ணனின் உடல் நேற்று அதிகாலை சொந்த கிராமத்துக்குக் கொண்டு வரப்பட் டது. உடலைப் பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத னர்.

தமிழக அரசு சார்பில், இந்து சமய அறநிலையத் துறை அமைச் சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், ஆட்சியர் பிரசாந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) பகலவன் மற்றும் கிராம மக்கள் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, மணிவண்ணனின் பெற்றோரிடம் தமிழக அரசு சார் பில், ரூ.20 லட்சத்துக்கான காசோ லையை அமைச்சர் ராமச்சந்திரன், தென் பிராந்திய ராணுவம் சார் பில், ரூ.2 லட்சத்துக்கான காசோலையை தலைமை அதிகாரி ஆனந்த் ஆகியோர் வழங்கினர். இதையடுத்து, மணிவண்ணனின் உடல் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசு மரி யாதையுடன் 24 குண்டுகள் முழங்க, அவரது உடல் நல்லடக்கம் செய் யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *