வேலைக்காரன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘வேலைக்காரன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
மோகன் ராஜா இயக்கத்தில் ‘வேலைக்காரன்’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதில் நயன்தாரா, பஹத் பாசில், ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ்ராஜ், சினேகா, ரோகிணி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
2016-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கப்பட்டு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. சென்னையில் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படம் செப்டம்பர் 29-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ‘வேலைக்காரன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் மோகன் ராஜா தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.