பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி
பிரியதர்ஷன் இயக்கும் புதிய படத்தில் உதயநிதி நாயகனாக நடிக்கிறார். இதை உதயநிதி தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
தளபதி பிரபு இயக்கத்தில் ‘பொதுவாக என் மனசு தங்கம்’, கவுரவ் நாராயணன் இயக்கத்தில் ‘இப்படை வெல்லும்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் உதயநிதி. இப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பிரியதர்ஷன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உதயநிதி ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ், மலையாளம், இந்தியில் படங்களை இயக்கும் முன்னணி இயக்குநர் பிரியதர்ஷனின் ‘காஞ்சிவரம்’, ‘சில சமயங்களில்’ ஆகிய இரு தமிழ்ப் படங்களும் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தவை.
தற்போது உதயநிதியை நாயகனாக வைத்து பிரியதர்ஷன் இயக்கும் படத்தை மூன் ஷூட் என்டெர்டெய்ன் மெண்ட் நிறுவனத்தின் சார்பில் சந்தோஷ் தயாரிக்கிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. கதாநாயகி, தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.