இந்திய கம்பெனிகளுக்கான ஹெச்-1பி விசாக்களை குறைத்தது அமெரிக்கா

இந்தியாவைச் சேர்ந்த 7 முக்கிய நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்காக வழங்கப்படுகிற ‘எச்-1 பி’ விசாக்கள், 2016-ம் ஆண்டில் குறைந்த அளவிலே கிடைத்துள்ளது.
அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்காக வழங்கப்படுகிற ‘எச்-1 பி’ விசாக்களை இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், குறிப்பாக டாடா, இன்போசிஸ், காக்னிஸன்ட் போன்ற நிறுவனங்கள்தான் அதிக எண்ணிக்கையில் பெற்று வந்துள்ளன.
அந்த நிறுவனங்கள்தான் அதிக எண்ணிக்கையிலான விசாக்களுக்கு விண்ணப்பிக்கின்றன. இதனால் குலுக்கலில் அதிக எண்கள் இடம்பெற வேண்டிய நிலை ஏற்படுகிறது; இதனால் அவர்களுக்கே கூடுதல் விசாக்கள் கிடைக்கின்றன என்று அமெரிக்காவில் சர்ச்சைகள் கிளம்பியது.
இந்த நிலையில் “அமெரிக்க பொருட்களையே வாங்குவோம், அமெரிக்கர்களையே வேலைகளில் அமர்த்துவோம்” என்ற தனது தேர்தல் பிரசார கோஷத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செயல்பட தொடங்கினார்.
‘எச்-1 பி’ விசா வழங்குவதில் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் கையெழுத்து போட்டார். இதன் காரணமாக மிகவும் திறமை வாய்ந்தவர்களுக்கும், அதிகபட்ச சம்பளம் பெறுகிறவர்களுக்கும் மட்டுமே ‘எச்-1 பி’ விசா வழங்கும் நிலை உருவாகி உள்ளது. எனவே இது இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்திருப்பதாக கருதப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த 7 முக்கிய நிறுவனங்களுக்கு 2015-ம் ஆண்டை காட்டிலும் 2016-ம் ஆண்டில் குறைந்த அளவிலே கிடைத்துள்ளது.
மொத்தம் 7 கம்பெனிகளுக்கும் சேர்ந்த 9,356 புதிய ஹெச்-1பி விசாகளுக்கு மட்டும் அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2016-ம் ஆண்டில் ஒப்புதல் வழங்கப்பட்ட 5,436 விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது 2015-ம் ஆண்டை விட 37 சதவீதம் குறைவு ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *