பருவநிலை ஒப்பந்தம்: டிரம்பின் முடிவுக்கு எதிர்ப்பு – சீனாவுக்கான அமெரிக்க தூதர் ராஜினாமா

பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து விலகுவது என்ற அதிபர் டிரம்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சீனாவுக்கான அமெரிக்க தூதர் ராஜினாமா செய்துள்ளார்.
பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திற்கு பல்வேறு நாடுகளும் தொடர்ச்சியாக ஒப்புதல் அளித்த வண்ணம் இருந்தன. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவும் ஒப்புதல் அளித்திருந்தார்.
பாரீஸ் ஒப்பந்தத்திற்கு அமெரிக்க தொழிலதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இந்த ஒப்பந்தத்தை ஏற்பதா? வேண்டாமா? என்ற குழப்பநிலையிலேயே தற்போதைய அதிபர் டிரம்ப் இருந்து வந்தார்.
இதனையடுத்து, பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்ததை விட்டு அமெரிக்கா வெளியேறுவதாக டிரம்ப் நேற்று அதிரடியாக அறிவித்தார். டிரம்பின் இந்த முடிவுக்கு சர்வதேச நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிபர் டிரம்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சீனாவுக்கான அமெரிக்க தூதர் பொறுப்பு வகிக்கும் டேவிட் ரேங்க் ராஜினாமா செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அரசு துறையில் டேவிட் பல்வேறு உயர் பொறுப்புகளில் பதவி வகித்துள்ளார். டேவிட் ரேங்கின் இந்த முடிவு அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், அதிகாரி ரேங்கின் முடிவு தனிப்பட்ட காரணங்களுக்கானது என்று அமெரிக்க அரசு துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *