டெல்லியில் நடந்தது போல் பயங்கரம்: ஓமலூர் அருகே பஸ்சில் மாணவியை கற்பழித்த கும்பல்
டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவி ஒருவர் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல் மற்றொரு சம்பவம் ஓமலூரிலும் நடந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலத்தில் இருந்து ஓமலூர் அருகே உள்ள நார்ணம்பாளையம் கிராமத்திற்கு தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த பஸ் நாரணம்பாளையம் கிராமத்தில் நேற்றிரவு 10 மணிக்கு மேல் நிறுத்தப்பட்டது.பஸ்சில் இருந்த பயணிகள் இறங்கி சென்றனர்.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு பஸ்சில் இருந்து கதறியபடி 15 வயது சிறுமி தலைதெறிக்க ஓடினார். இதைப் பார்த்த அந்த பகுதியினர் விசாரித்த போது பஸ்சுக்குள் தன்னை 3 பேர் கற்பழித்ததாக சிறுமி கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் பஸ்சிற்குள் ஏறினர். உள்ளே இருந்த 3 பேரை தரதரவென வெளியே இழுத்து வந்தனர். அவர்களை அடித்து உதைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சிறுமி மற்றும் 3 பேரையும் ஓமலூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
பஸ்சில் பிடிபட்டவர்கள் சேலம் சன்னியாசி குண்டு பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (37), அதிகாரிப்பட்டியை சேர்ந்த முருகன் (35), வாழப்பாடி முத்தம்பட்டியை சேர்ந்த பெருமாள் (22) என்று தெரிய வந்தது. மணிவண்ணன், முருகன் இருவரும் பஸ்சில் நேற்று டிரைவராக இருந்தவர்கள். பெருமாள் கண்டக்டர்.
3 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி சேலம் அருகே உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். வீட்டில் இருந்த சிறுமிக்கும், பெற்றோருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்றும் தகராறு ஏற்பட்டதால் வீட்டில் கோபித்து கொண்டு சேலம் பழைய பஸ் நிலையத்திற்கு சென்றார். அப்போது அங்கு நாரணம்பாளையம் கிராமத்திற்கு புறப்பட தயாராக நின்ற பஸ்சில் ஏறினார்.
அனைத்து பயணிகளும் இறங்கிய நிலையில் சிறுமி மட்டும் கண் கலங்கிய நிலையில் பஸ்சில் இருந்ததார். இதை கவனித்த பஸ் கண்டக்டர் சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்தார்.
அப்போது மாணவி வீட்டில் கோபித்து விட்டு வந்தததை 2 டிரைவர்கள் மற்றும் கண்டக்டர் தெரிந்து கொண்டனர். இதையடுத்து 3 பேரும் அந்த மாணவியை பஸ்சிலேயே சேலத்திற்கும், நாரணம்பாளையத்திற்கும் பகல் முழுவதும் அழைத்து சென்றனர்.
இரவு 10 மணிக்கு மேல் நாரணம்பாளையத்தில் பஸ்சை நிறுத்தினர். பயணிகள் அனைவரும் இறங்கி சென்றதும் சிறுமி மட்டும் பஸ்சில் இருந்தார். இதைப்பார்த்த டிரைவர், கண்டக்டர்கள் 3 பேருக்கும் மாணவி மீது சபலம் ஏற்பட்டது.
மாணவியை 3 பேரும் மாறி, மாறி கற்பழித்தனர். அப்போது மாணவி சத்தம் போட்டதால் அவரது வாயில் துணியை திணித்து பலாத்காரம் செய்தனர்.
ஒரு மணி நேரம் 3 பேரும் மாறி மாறி கற்பழித்ததால் கதறி துடித்த மாணவி பஸ்சில் இருந்து இறங்கி ஓடினார். அப்போது பொது மக்கள் 3 பேரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பிடிபட்ட டிரைவர், கண்டக்டர்கள் மற்றும் அந்த மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவி ஒருவர் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதே போல் சேலத்திலும் நடந்து இருப்பதால் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.