தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் கைகோர்கும் மகேஷ் பாபு
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, அவரது அடுத்த படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் இணைந்து நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மகேஷ் பாபு தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர்' படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
ஸ்பைடர்’ மூலம் மகேஷ் பாபு நேரடியாக தமிழில் அறிமுகமாகிறார்.
இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
இந்த படத்தை முடித்து பிறகு, அடுத்ததாக கோரதாலா சிவா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் மகேஷ் பாபு நடிக்க இருக்கிறார். அந்த படத்தில் நடிகர் சரத்குமாரும் நடிக்க இருக்கிறாராம். மகேஷ் பாபுவின் அப்பா கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சரத்குமார் தற்போது தமிழில் அடங்காதே',
சென்னையில் ஒரு நாள்-2′, `ரெண்டாவது ஆட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதுதவிர மலையாளம், தெலுங்கு, கன்னடத்திலும் பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.