ஆப்பிள் WWDC: ஆறு முக்கிய அறிவிப்புகள்
ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர் மாநாடு (WWDC 2017) முதல் நாளில் புதிய இயங்குதளம், மேக், ஐபேட் ப்ரோ மற்றும் பல்வேறு முக்கிய சாதனங்கள் சார்ந்த அறிவிப்புகள் வெளியாகின. WWDC முதல் நாளில் அறிமுகமானவற்றை தொடர்ந்து பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் சர்வதேச டெவலர்ப்பர்கள் மாநாடு (WWDC) நேற்று துவங்கியது. அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் நடைபெற்ற இவ்விழாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக், மற்றும் அந்நிறுவன பொறியாளர்கள் ஆப்பிளின் புதிய இயங்குதளங்கள் மற்றும் சாதனங்கள் அறிமுகம் செய்யதனர்.
அந்த வகையில் ஆப்பிள் டெவலப்பர்கள் மாநாட்டின் (WWDC) முதல் நாளில் ஆப்பிள் அறிமுகம் செய்தவற்றை தொடர்ந்து பார்ப்போம்.
- ஆப்பிள் டிவி ஒ.எஸ்:
ஆப்பிள் டிவி ஒ.எஸ்.-இல் அதிகப்படியான தரவுகள், அமேசானின் பிரைம் வீடியோ சேவை வழங்கப்படுகிறது. ஆப்பிள் டிவி மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆப்பிள் டிவி செயலியில் இந்த சேவைகள் வழங்கப்படும் என ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்தார்.
- வாட்ச் ஒ.எஸ். 4:
ஆப்பிள் வாட்ச் சாதனத்தை இயக்கும் வாட்ச் ஒ.எஸ்.-இன் புதிய பதிப்பு அறி்முகம் செய்யப்பட்டுள்ளது. புதிய பதிப்பில் அதிகப்படியான மாற்றங்கள் வழங்கப்படவில்லை. எனினும் சில அம்சங்கள் அனைவரையும் கவரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
வாட்ச் ஒ.எஸ். இயங்குதளத்தில் மேம்படுத்தப்பட்ட சிரி மெஷின் லேர்னிங் மூலம் வாட்ச் திரையில் தோன்றக் கூடியவற்றை ஸ்மார்ட் முறையில் காண்பிக்கும். இதில் நீங்கள் செய்ய வேண்டிய பணிகளுக்கான நினைவூட்டல் (ரிமைண்டர்), டிராஃபிக் நிலவரம், செய்திகள் மற்றும் ஸ்மார்ட் ஹோம் கண்ட்ரோல்களை இயக்க முடியும்.
ஃபிட்ணஸ் அம்சங்களை பொருத்த வரை ஸ்மார்ட் வொர்க்அவுட் கண்ட்ரோல்கள், உடற்பயிற்சி சார்ந்த தகவல்களை பெற முடியும். இத்தடன் வாட்ச் திரையை பிளாஷ்லைட் போன்று பயன்படுத்தும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் வாட்ச் மற்ற சாதனங்களுடன் வேலை செய்யும், இதனால் குளூக்கோஸ் மாணிட்டர், ப்ளூடூத் உள்ளிட்டவைகளுடன் இணைந்து வேலை செய்யும்.
- மேக் ஒ.எஸ். ஹை சியரா:
புதிய மேக் ஒ.எஸ்.-இல் ஆப்பிள் அதிகப்படியான மாற்றங்களை வழங்கவில்லை. எனினும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் அம்சங்களில் ஸ்மார்ட் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. சஃபாரி பிரவுசருக்கான அப்டேட்கள், வீடியா பிளாக்கிங் மற்றும் போட்டோ எடிட்டிங் உள்ளிட்ட அம்சங்களில் புதிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் அதிக சக்திவாய்ந்த கிராஃபிக்ஸ் என்ஜின் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி ஆப்ஷன் அன்-ரியல் கேமிங் என்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளது.
- புதிய மேக்:
ஆப்பிள் ஐமேக் சாதனத்தில் அதிவீன டிஸ்ப்ளே, அதிவேக பிராசஸர் மற்றும் கிராஃபிக்ஸ் திறன் கொண்ட பிராசஸர், விர்ச்சுவல் ரியாலிட்டி தரவுகளை உருவாக்கும் வசதி, புதிய போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேக்புக் மற்றும் மேக்புக் ப்ரோ சாதனங்களில் அதிவேக சிப்செட் மற்றும் டிரைவ்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று மேக்புக் ஏர் சாதனத்தில் அதிவேக சிப்செட் மற்றும் 13 இன்ச் மேக்புக் ப்ரோ விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஐமேக் சாதனத்தின் முண்ணோட்டம் ஒன்றையும் ஆப்பிள் வெளியிட்டுள்ளது, 27 இன்ச் டார்க் கிரே நிறம் கொண்டுள்ள ஐமேக் ப்ரோ 18 பிராசஸர் கோர்களினால் சக்தியூட்டப்படுகிறது.
டிசம்பர் மாதம் விநியோகம் செய்யப்படவுள்ள ஐமேக் விலை 4999 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.3,21,613 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- ஐ.ஒ.எ.எஸ் 11:
ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களை இயக்கும் ஐ.ஒ.எஸ். 11 ஐமெசேஜ்களை சாதனங்களிடையே சிறப்பாக இயக்கி, மெமரியை சேமிக்கும். பழைய போட்டோ மெசேஜ்களை கிளவுட் ஸ்டோரேஜில் சேமித்து சாதனத்தின் மெமரியை பயனுள்ளதாக பயன்படுத்த வழி செய்யும்.
ஆப்பிள் பே சேவையை ஐமெசேஜ் மூலம் மற்றவர்களுடன் பயன்படுத்தி கொள்ளலாம், இதற்கென ஆப்பிள் பே கேஷ் கார்டு ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- 10.5 இன்ச் ஐபேட் ப்ரோ:
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய 10.5 இன்ச் ஐபேட் ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய டேப்லெட் மெல்லிய வடிவமைப்பு, ஹோம் பட்டன் மற்றும் கீபோர்டு கவர் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. 10.5 இன்ச் ஐபேட் ப்ரோ $649 அதாவது இந்திய மதிப்பில் ரூ.41,753 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- ஹோம்பாட்:
ஆப்பிளின் சிறிய ஹோம்பாட் ஸ்பீக்கர் சோனோஸ் மற்றும் அமேசான் எக்கோ சாதனங்களுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் மியூசிக்கோலாஜிஸ்ட் எனும் வசதியை கொண்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் மியூசிக்கோலாஜிஸ்ட் ஆப்பிள் அக்கவுண்ட் மூலம் பாடல்களை இயக்க சிரியுடன் உரையாடும்.