கோவா கால்பந்து அணியின் பயிற்சியாளராக செர்ஜியோ நியமனம்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தில் (ஐ.எஸ்.எல்.) எப்.சி.கோவா அணியின் புதிய பயிற்சியாளராக ஸ்பெயினை சேர்ந்த செர்ஜியோ லோபெரா நேற்று நியமிக்கப்பட்டார்.
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தில் (ஐ.எஸ்.எல்.) எப்.சி.கோவா அணியின் பயிற்சியாளராக கடந்த 3 ஆண்டுகளாக பிரேசில் ஜாம்பவான் ஜிகோ இருந்தார். கடந்த சீசனுடன் அவர் விலகியதையடுத்து புதிய பயிற்சியாளராக ஸ்பெயினை சேர்ந்த செர்ஜியோ லோபெரா நேற்று நியமிக்கப்பட்டார்.
இவரது ஒப்பந்த காலம் 2 ஆண்டுகள் ஆகும். ஜூலை மாதம் பொறுப்பு ஏற்கிறார். 40 வயதான செர்ஜியோ ஏற்கனவே புகழ்பெற்ற பார்சிலோனா கிளப்பின் உதவி பயிற்சியாளராக இருந்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *