ஜனாதிபதி தேர்தல் குறித்து முக்கிய முடிவெடுக்க காங்கிரஸ் கட்சியின் செயற்குழு இன்று கூடுகிறது
ஜனாதிபதி தேர்தல் மற்றும் முக்கிய பிரட்சனைகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயற்குழு இன்று டெல்லியில் கூடுகிறது.
ஜனாதிபதி தேர்தல் மற்றும் முக்கிய பிரட்சனைகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயற்குழு இன்று டெல்லியில் கூடுகிறது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் நாட்டில் நடக்கும் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்படுவதோடு சில முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த முறை நடந்த கூட்டத்தில் சோனியா காந்தி கலந்து கொள்ளவில்லை. ராகுல் தலைமையில் அந்த கூட்டம் நடந்தது. தற்போது 7 மாதம் கடந்துவிட்ட நிலையில் கட்சியின் மூத்த உறுப்பினர்களை சோனியா சந்திக்கிறார். வரும் அக்டோபர் மாதம் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இன்று நடக்கும் செயற்குழுவில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலையொட்டி அனைத்து எதிர்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் குறித்தும் பேசப்படும். 2019ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிரான பலம் பொருந்திய ஒரு கூட்டணி அமையும் விதமாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறது.
கடந்த 2013ம் ஆண்டு ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.