ஜி.எஸ்.டி இந்திய பொருளாதாரத்தில் திருப்பு முனையாக அமையும்: பிரதமர் மோடி
ஜூலை 1-ம் தேதி அமல் ஆகவுள்ள ஜி.எஸ்.டி இந்திய பொருளாதாரத்தில் திருப்பு முனையாக அமையும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதலும் அளிக்கப்பட்ட நிலையில், மாநிலங்களின் சட்டசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகின்றது.
ஜூலை, 1ல், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறை அமலாகிறது. அதற்கு முன், அனைத்து மாநிலங்களும், ஜி.எஸ்.டி., சட்ட மசோதாவை, சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும். ஜி.எஸ்.டி., வரி விதிப்பில், 5, 12, 14, 28 சதவீதம் என, நான்கு வித வரிகள் உள்ளன.
இந்நிலையில், ஜூலை 1-ம் தேதி அமல் ஆகவுள்ள ஜி.எஸ்.டி இந்திய பொருளாதாரத்தில் திருப்பு முனையாக அமையும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரே நாடு, ஒரே சந்தை, ஒரே வரி என்பது சாமானிய மனிதனுக்கு பெரிதும் பயனளிக்கும் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி வரியை இறுதி செய்வதற்கான கவுன்சில் கூட்டம் தலைநகர் புதுடெல்லியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிகளை பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்தார். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து விடுப்பட்ட பொருட்களுக்கான வரிகளை இறுதி செய்வதற்கான அடுத்த கூட்டம் வருகின்ற ஜூன் 11-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.