அ.தி.மு.க. அணிகள் சண்டையால் விரைவில் தேர்தல் வரும்: தமிழிசை சவுந்தரராஜன்
அ.தி.மு.க. அணிகள் சண்டையால் விரைவில் தேர்தலை சந்திக்க வேண்டிய சூழ்நிலை வரும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் இருந்து நான் ஒதுங்கவில்லை. என்னை யாரும் நீக்க முடியாது என்கிறார் தினகரன். ஆனால் தினகரனோடு தொடர்பு இல்லை என்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.
கட்சியில் நிலவும் குழப்பம் ஆட்சியிலும் எதிரொலிக்கிறது. இப்படி கட்சியையும், ஆட்சியையும் குழப்பிக் கொண்டிருந்தால் நிர்வாகம் எப்படி நடக்கும்?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. ஆண்டு கொண்டிருக்கிறது. நிலையான ஆட்சி வேண்டும் என்பதுதான் எல்லோரது எதிர்பார்ப்பும்.
தற்போது நடப்பதை வெறும் உட்கட்சி பிரச்சனை என்று எடுத்துக் கொள்ள முடியாது. ஆட்சி சம்பந்தப்பட்டது. கட்சியின் நிலையற்ற தன்மை ஆட்சியிலும் பிரதிபலிக்க கூடாது. என்ன முடிவெடுத்தாலும் தெளிவான முடிவெடுக்க வேண்டும்.
தெளிவான முடிவெடுக்காமல் நிலை தடுமாறும் பட்சத்தில் தேர்தலை சந்திக்க வேண்டிய சூழ்நிலை வரும்.
நடு இரவு ‘பிரேக்கிங் நியூஸ்’ என்றில்லாமல் தடையில்லாமல் ஆட்சியை தொடர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.