ராமேஸ்வரம் மீனவர்களின் 42 படகுகள் விடுவிப்பு: இலங்கை அறிவிப்பு

ராமேஸ்வரம் மீனவர்களின் 42 படகுகளை விடுவிப்பதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகேந்திர அமரவீரா தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களின் 143 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 42 படகுகளை விடுவிக்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதனால் தமிழக மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து அமைச்சர் கூறுகையில், இந்த படகுகளை விடுவிப்பதால் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கலாம் என்று அர்த்தமில்லை. அவ்வாறு மீன் பிடித்தால் அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து பேசினார். அப்போது அவர்களின் படகுகளை விடுவிப்பதாக இலங்கை அரசு உறுதி அளித்தது. அதன் அடிப்படையில் தற்போது படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து மீனவர்கள் சங்க தலைவர் ஒருவர் கூறுகையில், இந்த செய்தி எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் நாங்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்கையில் எங்களுக்கு மிகுந்த அச்சம் ஏற்படுகிறது.
இதைப் போக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுவிக்கப்பட்ட படகுகள் எங்களுக்கு விரைவில் கிடைக்க மத்திய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் மீதம் உள்ள 101 படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *